கரூரில் கள்ள நோட்டை கொடுத்து பொருட்கள் வாங்க முயன்ற கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கரூர் திருவிகா ரோடு அருகே உள்ள சிவா பில்டிங் லைன் பகுதியில் முகிலன் என்பவர் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த கடைக்கு வந்த ஒருவர் கடையில் சாம்பிராணி வாங்கியுள்ளார். பின்னர் அதற்கு ரூ.500 கொடுத்துள்ளார். அப்போது அந்த
பணத்தை சோதனை செய்து பார்த்தபோது, அது கள்ள நோட்டு என தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக அவர் கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதின்குமார் தலைமையிலான போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து கள்ள நோட்டை கொடுத்த நபரை பிடித்து சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து கிடுக்குபிடி விசாரணை நடத்தினார்.
விசாரணையில், அவர் பசுபதிபாளையம் அருகே உள்ள ராமானுர் பகுதிக்கு உட்பட்ட ராஜா நகரை சேர்ந்த ரெங்கராஜ் என்பதும், அவர் கார் டிரைவராக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. பின்னர் அவரிடம் இருந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 5,200 கள்ள நோட்டு ஒன்று ,கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் ரெங்கராஜை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் 85 மது பாட்டில்கள் பறிமுதல்
கரூர் மாவட்டத்தில் 90க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. 12 மணி முதல் 10 மணிக்கடை செயல்படுகிறது. இந்த நேரம் தவித்துக் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மதுவிலக்கு போலீசார்களும் அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார்களும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கரூர், குளித்தலை, மாயனூர், லாலாபேட்டை, தாந்தோணி மலை, மற்றும் மதுவிலக்கு போலீசார் பல்வேறு பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதலை விற்பனை செய்ய முயன்றதாக 11 நபர்கள் மீது வழக்குப்பதிந்து அவர்களிடம் இருந்து 85 குவாட்டர் பாட்டில்களை போலீசார் படுமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அளவு 15,300 என்பது குறிப்பிடத்தக்கது கடந்த சில மாதங்களாக கரூர் மாவட்டத்தில் பரவலாக மதுபானங்களை பதிக்க வைத்து கூடுதல் வேலைக்கு விற்பனை செய்யும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட போலீஸார் அவர்களும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த நிகழ்வுகளை முற்றிலும் கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அனுமதி இன்றி சேவல் சண்டை இரண்டு வாலிபர்கள் கைது.
இரண்டு சேவல்கள் பறிமுதல் அரவக்குறிச்சி முடக்கூர் அருகே வடகப்பட்டியில் அனுமதி இன்றி சேவல் சண்டையில் ஈடுபட்ட இரண்டு பேர் வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். 2000 ரொக்கம் இரண்டு சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அரவக்குறிச்சி மடக்கூர் அருகே வடுகப்பட்டியில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக சேவல் சண்டை நடப்பதாக அருவாக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து அங்கு சென்று அரவக்குறிச்சி போலீசார் அனுமதி இன்றி சேவல் சண்டைகள் ஈடுபட்டிருந்த வடுகப்பட்டி சிவகுமார் வேலம்பாடி மூர்த்தியாகிய இரண்டு பேரையும் கைது செய்து நான் மேலும் அவர்களிடம் இருந்து இரண்டு சேவல்கள் ரொக்கம் ரூ, 2000 ஆகியவை பறிமுதல் முதல் செய்யப்பட்டது.