விழுப்புரம்: திண்டிவனம் அருகே நண்பன் வீட்டில் திருடிய கல்லூரி மாணவனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 26 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் அய்யனாரப்பன்(47). இவரது வீட்டில் அவரது மகள் திருமணத்திற்காக சிறுக, சிறுக சேர்த்து வைக்கப்பட்ட தங்க நகைகளை டப்பாவில் போட்டு சிலாபில் வைத்துள்ளனர். கடந்த ஜனவரி 1ஆம் தேதி அன்று வீட்டில் இருந்த தங்க நகைகள் மாயமானது. இதுகுறித்து அய்யனாரப்பன் ஒலக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் நகைகள் மாயமானது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.


இந்நிலையில், அய்யனாரப்பன் மகன் ஐயப்பன் என்பவர் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை கல்லூரியில் பிஏ வரலாறு மூன்றாம் ஆண்டு படித்து வரும், அவருடன் அதே கல்லூரியில் பிஏ மூன்றாம் ஆண்டு படித்து வரும் வானூர் அடுத்த டி. பரங்கிணி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜி மகன் கௌதம்(22), என்பவர் ஐயப்பனுடன், அவ்வப்போது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். நகைவேல் மாயமானதிலிருந்து கௌதம் ஐயப்பன் வீட்டிற்கு வருவதில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், நேற்று கௌதமை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது நண்பரான ஐயப்பன் வீட்டில் தங்க நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரிடம் இருந்து 26 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார், கௌதம் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.