கோவில்பட்டியில் உளவுப்பிரிவு உதவி ஆய்வாளர் என கூறி கடைகளில் பணம் வசூலில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர்.


கோவில்பட்டி தினசரி சந்தை பகுதியில் செயல்பட்டுவரும் அரிசி கடைக்கு நேற்று மாலை வந்த ஒருவர் தன்னை உறவு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் என அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர் தனது கார் பழுதாகி நிற்பதாகவும் அதனை சரி செய்ய ரூ.3000 வேண்டும் என கேட்டுள்ளார். அந்தப் பணத்தை நான் மீண்டும் ஆன்லைனில் உங்களுக்கு திருப்பி தந்து விடுகிறேன் எனவும் கூறியுள்ளார். இதையடுத்து கடைக்காரர் அவருக்கு பணத்தைக் கொடுத்து உள்ளார்.




மேலும் கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள துணிக்கடையில் 2 ஆயிரம் ரூபாயும் அதே பகுதியில் உள்ள மற்றொரு அரிசி கடையில் 2000 ரூபாய் தாருங்கள் தனது வாகனம் பழுதாகி விட்டாதாகவும்  கூறி அங்கிருந்த கடை ஊழியர்களிடம் கேட்டுள்ளார். அப்பொழுது கடையில் பணியாற்றிய ஊழியர்கள் உரிமையாளர் வந்த பின்பு அவரிடம் கேட்டு பெற்றுக் கொள்ளவும் என்று கூறியுள்ளனர். சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர் கடையின் உரிமையாளர் காவல்துறையுடன் வருவதை அறிந்த அந்த ஆசாமி தப்பி ஓட முயற்சித்துள்ளார். உடனடியாக காவல்துறையினர் அவரை பிடித்து கிழக்கு காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டதில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது இவர் கடந்த 3-ஆம் தேதியிலிருந்து கோவில்பட்டி மார்கெட் பகுதிகளில் உள்ள கடைகளில் தான் காவல் உதவி ஆய்வாளர் என்று கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடையின் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளில் சென்று வசூல் நடத்த முயன்ற போது அங்கு பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது ஆனால் அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் உடனடியாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பந்தப்பட்ட கடைக்கு வந்த போலீஸார் கடைக்காரர் கூறிய அடையாளங்களை கொண்டு விசாரணை நடத்தினர். இதில் அவர் கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் பகுதியில் உள்ள மற்றொரு கடையில் பணம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தொடர்ந்து நடத்திய தீவிர ரோந்து சென்று, அந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.




அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில், அவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா மாணிக்கவாசகர் நகரைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (47) என்பது தெரியவந்தது. மேலும் அவர் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளராக பணிபுரிந்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் அவர் வேறு எந்தப் பகுதியிலும் இது போன்று போலீஸ் என கூறி பணம் வசூல் செய்து உள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.