கோவையில் காதலிக்க மறுத்த பெண்ணின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோபிநாதன். இப்வர்  கோவை மாவட்டம் பிரஸ் காலனி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கோபிநாதன் கோவையில் தங்கி அரசுக் கல்லூரியில் பயின்று வந்த போது, அதே கல்லூரியில் படித்த அந்த இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த இளம் பெண் கோபிநாதன் உடனான காதலை முறித்துக் கொண்டதாக தெரிகிறது. 


மீண்டும் காதலிக்குமாறு அப்பெண்ணை கோபிநாதன் வலியுறுத்தி வந்ததாகவும், அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்து வந்ததாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கோபிநாதன் அந்த இளம் பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கோவை மாவட்டம் சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகாரளித்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் கோபிநாதனை கைது செய்து, கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


பாலியல் தொல்லை - சிறை தண்டனை


கோவை மாவட்டம் துடியலூர் அண்ணாநகர்  பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (45) என்ற கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று  தீர்ப்பளிக்கப்பட்டது. போக்சோ நீதிமன்ற நீதிபதி குலசேகரன் தீர்ப்பினை வழங்கினார்.


 



செல்வராஜ்


குற்றவாளி செல்வராஜிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு கூடுதலாக கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் எனவும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். சம்பவம் நடைபெற்று இரு ஆண்டுகளில் விரைவாக குற்றவாளிக்கு தண்டணை பெற்று கொடுத்து துடியலூர் அனைத்து மகளிர் காஙல் துறையினருக்கு கோவை சரக டிஐஜி முத்துசாமி பாராட்டுகளை தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண