தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில், வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருவது தொடர் கதையாகியுள்ளது. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் வட மாநில இளைஞர்கள் அதிகளவு வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக கட்டிட வேலையில் அதிக அளவில் வட மாநில இளைஞர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவ்வப்பொழுது தமிழகத்தில் நடைபெறும் பல கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களில் வடமாநில நபர்கள் ஈடுபடுவது தொடர்ச்சியாக உள்ளது. இந்நிலையில்  தாழம்பூர் பகுதியில் கட்டுமான தொழிலாளியாக பணிபுரிந்து வந்த வடமாநில நபரை, திருட முயன்றதாக கூறி அப்பகுதி மக்கள் தாக்கியதில் அவர் பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 



 

 “வீடு எகிறி குதித்த நபர்”

 

சென்னை தாழம்பூர் அடுத்த காரணி பகுதியில் உள்ள நேரு தெருவில் விடியற்காலை பகுதியில், இருந்த  வீடு ஒன்றில் வட மாநில நபர் ஒருவர் எகிறி குதித்துள்ளார். வீட்டிலிருந்த நாய் குறைத்துள்ளது, நாய் குறைத்ததை பார்த்த நபர் உடனடியாக அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் , சம்பந்தப்பட்ட நபர் திருட வந்ததாக நினைத்து உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க முயற்சி செய்துள்ளனர்.

 



 

தன்னை பிடிக்க முயற்சி செய்த நபர்களை பார்த்த அந்த வட மாநில நபர், அருகில் இருந்த செங்கற்கள் மற்றும் கற்களை கொண்டு கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து அப்பகுதியை சேர்ந்த நபர்கள் இணைந்து மடக்கிப்பிடித்து கட்டையால் தாக்கியுள்ளனர். இதனால் வட மாநில நபருக்கு மூக்கு, வாய் உள்ளிட்ட பகுதியில்  ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் தப்பி ஓடாமல் இருப்பதற்கு, கை கால்களை கட்டிவிட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவம் இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உயிருக்கு போராடி இருந்த நபரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,  மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர். 

 



 

"காவல்துறை விசாரணை" 

 

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சம்பந்தப்பட்ட வட மாநில நபர் தாழம்பூர் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. மேற்கு வங்காளம் பகுதி சேர்ந்த கேஸ்ட்ரா மோகன் பர்மன் (43) எனவும் இவர் ஆறு மாதங்களாக அந்த பகுதியில் தங்கி வேலை பார்த்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக கட்டுமான ஒப்பந்ததாரர் கார்த்திகேயன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வட மாநில நபரை தாக்கிய, அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 32 ) ராஜா (வயது 28) உதயசங்கர் (வயது 37) விக்னேஷ் (வயது 29) பாலமுருகன் (வயது 33) ரமேஷ் (வயது 28) ஆகிய ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் ஆறு பேரும் மீதும் ஆறு பிரிவினுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வடமாநில நபர் இன்று காலை உயிரிழந்ததை தொடர்ந்து, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்து தாழ்ந்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வட மாநில இளைஞர் ஒருவர் அப்பகுதி நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது