ஊருக்குச் சென்ற பெற்றோர்..
சென்னை அடுத்த குரோம்பேட்டை பாரதிபுரம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவர் வெல்டிங் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் ஸ்ரீமதி (20 ) . இவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் , முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களுக்கு சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை பெற்றோர்கள் சென்ற நிலையில் , மகள் ஸ்ரீமதி மட்டும் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக வீட்டிலிருந்து உள்ளார். இந்த நிலையில், சனிக்கிழமை அன்று கல்லூரியில் இருந்து பெற்றோருக்கு, தொலைபேசி மூலம் உங்கள் மகள் கல்லூரிக்கு தொலைபேசி எடுத்து வருவதாகவும், கல்லூரிக்கு தொலைபேசி எடுத்து வரக்கூடாது என்று கூறியுள்ளனர். பின்னர் மயிலாடுதுறையில் உள்ள பெற்றோர்கள் தொலைபேசி மூலம், ஸ்ரீமதியிடம் கடுமையாக கண்டித்து தொலைபேசியை துண்டித்துள்ளனர் .
தொலைபேசி எடுக்கவில்லை
பின்பு சிறிது நேரத்துக்கு பின்பு ஸ்ரீமதியின் தொலைபேசி தொடர்பு கொண்டு போது ஸ்ரீமதி தொலைபேசி எடுக்காததால், அருகில் உள்ள வீட்டிற்கு தொடர்பு கொண்டு ஸ்ரீமதி ஃபோனை எடுக்கவில்லை எனவும் வீட்டிற்கு சென்று தொலைபேசி எடுத்து பேசும் படி சொல்லுங்கள் என தெரிவித்துள்ளனர். இதனால் அருகில் இருந்த வீட்டினர் ஸ்ரீமதியின் வீட்டிற்கு சென்று பார்த்த போது, உள்ளே மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் , மாணவி ஸ்ரீமதி இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சிட்லபாக்கம் போலீஸ் சார் இடம் தகவல் அளித்தனர் தகவல் பேரில், வந்த சிட்லபாக்கம் போலீசார் மாணவியின் உடலை பிரேதத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவி ஸ்ரீமதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Suicidal Trigger Warning.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)