கோவில்கள் நிறைந்த மாவட்டமாக இருந்த காஞ்சிபுரம், தொழிற்சாலை நிறைந்த மாவட்டமாக உருவெடுக்க துவங்கியதை அடுத்து, தற்பொழுது ரவுடிகள் நிறைந்த மாவட்டமாக மாறி வருகிறது. தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் தாதாக்கள் உருவாகுவதும், குட்டி ரவுடிகள் அட்டகாசம் செய்வதும் தொடர்கடையாகியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தாதாவாக வலம் வந்த படப்பை குணாவின் கொட்டத்தை காவல்துறையினர் சமீபத்தில் அடக்கினர்.  இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி பல குட்டி ரவுடிகளும் , பழைய ரவுடிகளும் தலைதூக்க துவங்கினர். அது போன்று சென்னை புறநகரில் ரவுடிசம் செய்து வந்த சோட்டா வினோத் மற்றும் ரமேஷ் ஆகிய இருவர் கூடுவாஞ்சேரி பகுதியில் கடந்த மாதம் என்கவுன்டர் செய்யப்பட்டனர். 


இந்த நிலையில், கடந்த வாரம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோக்கண்டி என்ற பகுதியில் பிரபல ரவுடி , குள்ள விஷ்வா என்கிற விஸ்வநாதன் போலீசாரால் என்கவுன்டர் செய்து கொலை செய்யப்பட்டார். விஸ்வா மீது, 5 கொலை வழக்கு, 7 கொலை முயற்சி வழக்கு, 5 வெடிகுண்டு வீசிய வழக்கு உட்பட 25 வழக்கிற்கு மேல் நிலுவையில் உள்ளன.  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் பிபிஜி குமரன். கடந்த 2012 ஆம் ஆண்டு,  பி.பி. ஜி . குமரன் என்பவர் நாட்டு வெடிகுண்டு வீசி கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். விஷ்வா பிபிஜி குமரனின் ஆதரவாளராக இருந்து வந்துள்ளார். பிபிஜி குமரனின் கொலை வழக்கில் தொடர்புடைய மண்ணூர் குட்டி என்பவரை, விஷ்வா தனது ஆதாரவாளர்களுடன் சேர்ந்து பிபிஜி குமரனுக்காக , மண்ணூர் குட்டியை கொலை செய்தார்.



இதனை அடுத்து அப்பகுதியில் பிரபல ரவுடியாக உருவெடுத்த விஷ்வா பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். சமீபத்தில் நடந்த பல்வேறு தொழில் போட்டி காரணமாக நடைபெற்ற கொலை வழக்கில் விஷ்வா பின்னணியில் தனது ஆதரவாளர்களை இயக்கி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக பிரமுகர் நாகராஜ் கொலை வழக்கிலும் விஸ்வாவிற்கு தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இரண்டு கொலை சம்பவங்கள் நடைபெற்றது. இதன் பின்னணியில், விஷ்வா இருப்பதாக காவல்துறையினர் சந்தேகித்திருந்தனர். இந்த நிலையில் தான் நடந்தேறி இருக்கிறது இந்த என்கவுன்டர் சம்பவம்.


கடந்த மாதம் 28ஆம் தேதி தன்னை என்கவுன்டரில் கொலை செய்து விடுவதாக உதவி ஆய்வாளரிடம் பேசியதாக வீடியோவை வைத்து விஷ்வா புகார் கொடுத்து இருந்த நிலையில் இந்த கொடூர என்கவுன்டர் சம்பவம் நடந்தேறி இருக்கிறது. இந்தநிலையில் சமீபத்தில் அடிக்கடி ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடிகள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருவதால் சட்ட ஒழுங்கு கூடுதல் Adgp அருண் தலைமையில் தனிக்குழு அமைத்து ரவுடிகளை ஒடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள முடக்கி விடப்பட்டது.  இந்த நிலையில்  காஞ்சிபுரத்திற்கு மகளிர் உரிமைத்தொகை திட்ட துவக்க விழாவிற்கு காஞ்சிபுரம் வந்து சென்றார். இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் விஷ்வா என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டுள்ளார்


இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஏடிஜிபி அருண், கொலை வெடிகுண்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தீவிரமாக தேடப்பட்டு வந்த ரவுடி குல்லா என்கின்ற விஸ்வா என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் அவருடன் தொடர்பில் உள்ள அவரது கூட்டாளிகளையும் தேடி வருவதாகவும் அவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஸ்ரீபெரும்புதூர் சுங்கவாசத்திரம் ஓரகடம் உள்ளிட்ட பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.