இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர்
சென்னை கொளத்தூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் வசிக்கும் 25 வயது பெண்மணி ஒருவர் டிப்ளமோ படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சுமார் 60 வயதுடைய ராமதாஸ் என்பவர் சுமார் 3 மாதத்திற்கு முன்பு அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.
பின்பு , அப்பெண் 08.09.2025 அன்று மாலை அவரது வீட்டின் அருகிலுள்ள தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்ற போது , அதே ராமதாஸ் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கட்டிப் பிடிக்க முயன்றுள்ளார். அப்பெண் சத்தம் போடவே, ராமதாஸ் வீட்டிற்குள் சென்று மறைந்து கொண்டதாகவும் , தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தவறாக நடக்க முயன்ற ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாதிக்கப்பட்ட அப்பெண் V-4 இராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
V-4 இராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட ராமதாஸ் ( வயது 61 ) சென்னை என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராமதாஸ் விசாரணைக்குப் பின்னர் (13.09.2025) ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கஞ்சா மற்றும் பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்த நபர்கள் கைது.
சென்னை ஓட்டேரி பகுதியில் கஞ்சா மற்றும் கத்திகளை வைத்து கொண்டு சிலர் சுற்றி திரிவதாக , ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் , உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 07.09.2025 அன்று ஓட்டேரி டோபிகானா பகுதியில் கண்காணித்து அங்கு கஞ்சா மற்றும் பட்டா கத்தியுடன் இருந்த அருண் ( வயது 35 ) , நாகராஜ் ( வயது 40 ) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 2.3 கிலோ கஞ்சா, 1 பட்டா கத்தி, பணம் ரூ.2,500 மற்றும் 1 எடை இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். விசாரணையில் தலைமறைவான வசந்தகமன் மற்றும் பால் பிரவீன் ஆகியோர் வடமாநிலம் சென்று கஞ்சாவை வாங்கி வந்து , சிலரிடம் கொடுத்து பாக்கெட்டுகளாக பிரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
P-2 ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, இவ்வழக்கில் தொடர்புடைய நரேந்திரன் ( வயது 33 ) இவரது தாயார் ஜான்சி ( வயது 57 ) அருண்குமார் ( வயது 19 ) , விமல்குமார் ( வயது 30 ) ஆகிய 4 நபர்களை (13.09.2025) கைது செய்தனர்.
விசாரணையில் விமல்குமார் P-2 ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் , இவர் மீது 3 - க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளும் , நரேந்திரன் மீது 4 கஞ்சா வழக்குகளும் , ஜான்சி மீது 3 கஞ்சா வழக்குகள் உட்பட 7 குற்ற வழக்குகளும் , அருண்குமார் மீது கஞ்சா ஆயுத சட்டம் , திருட்டு உட்பட 5 குற்ற வழக்குகளும் உள்ளது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட நால்வரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவான நபர்களை காவல் குழுவினர் தேடி வருகின்றனர்.