11ஆம் வகுப்பு தேர்வு எழுத சென்ற மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
11ஆம் வகுப்பு மாணவி..
சென்னை பாடியநல்லூரைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி பெற்றோரை இழந்ததால், தனது பெரியம்மா வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். அங்கு தனக்கு இருக்கப் பிடிக்கவில்லை என்பதால், போலீசார் உதவியுடன் ஒரு காப்பகத்தில் சேர்ந்து, அங்கிருந்து தனது பள்ளிப் படிப்பை தொடர்ந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவி தேர்வு அறையில் இருந்து மாயமானார். இது மாணவி கூட பாதுகாப்புக்கு சென்ற பெண் பாதுகாவலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது மாணவி தேர்வு எழுத வரவில்லை என்று அதிர்ச்சி தகவலை கூறினார்.
இதனைத்தொடர்ந்து, பாதுகாவலர் செங்குன்றம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர்கள் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகாரை மாற்றினர். இதுதொடர்பாக மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த மாணவியின் பெரியம்மாவிடமும் விசாரணை செய்ததில், அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞரை காதலித்ததாகவும், அவர் கடத்தி சென்றிருக்கலாம் என்றும் கூறினார். பெரியம்மா கொடுத்த தகவலின்படி, வழக்குப்பதிவு செய்து மாணவியை போலீசார் தேடி வந்த நிலையில், அந்த இளைஞர் மாணவியை செங்குன்றம் பஸ் ஸ்டாண்டில் விட்டுசென்றுள்ளார். இதனால், செய்வதறியாது திகைத்து நின்ற மாணவி, அதே மகளிர் காவல் நிலையத்துக்கு வந்தார்.
அதிர்ச்சி தகவல்..
அப்போது, மாணவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தான் பெரியம்மா வீட்டில் வளர்ந்து வந்தபோது, துரைமுருகன் என்பவர் தன்னை காதலித்து வந்ததாகவும், இதனை கண்டித்த பெரியம்மா தன்னை காப்பகத்தில் சேர்த்ததாகவும் கூறினார். அதன்பிறகும் தங்களின் காதல் தொடர்ந்த நிலையில், பொதுதேர்வு எழுத வந்தபோது, துரைமுருகன் ரகசியமாக சந்தித்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று, போரூரில் சாலையோரத்தில் உள்ள ஒரு கோயிலில் தாலி கட்டினார். அதன்பிறகு, திருச்சி, மதுரை, தேனி என பல ஊர்களுக்கு அழைத்து சென்ற தன்னை, திருச்சி அருகே ஒரு கிராமத்தில் உள்ள வீட்டில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். மேலும், போலீஸ் அவரை தேடுவது தெரிந்ததும், தன்னை பஸ் ஸ்டாண்டில் விட்டு சென்றதாகவும் கூறினார். இதனைத்தொடர்ந்து, செங்குன்றம் அருகே பதுங்கி இருந்த துரைமுருகனை போக்சோ சட்டத்தில் கைது சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்