போரூர் அடுத்த பெருக்கம்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன்(39), வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்த மதுபாலா(29), என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் கோஷல் என்ற மகன் உள்ள நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகனை அழைத்து கொண்டு மதுமாலா மைசூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.



இதையடுத்து செந்தமிழ்ச்செல்வன் தனது நண்பர்களுடன் சென்று மைசூரில் மனைவின் வீட்டில் இருந்து தனது குழந்தையை தூக்கி வந்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மைசூர் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மைசூர் நீதிமன்றத்தில் தனது மகனை மீட்டு தர கோரி மதுமாலா வழக்கு தொடர்ந்த நிலையில் மகனை தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என மைசூர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் , ஆனால் இதுவரை தனது மகனை தன்னை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் இங்கு வந்து பார்த்தாலும் தனது மாமியார் குழந்தையை பார்க்க விடுவதில்லை என கூறி வந்தார்.



இந்த நிலையில் தனது மகனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மதுமாலா அவரது தாயுடன் தனது மாமியாரின் வீட்டின் முன்பு நேற்று இரவு முதல் விடிய, விடிய கணவரின் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள் பக்கமாக சாத்தப்பட்ட கதவு திறக்குமாறு கூறிய நிலையில், மதுமாலாவின் மாமியார் கதவை திறக்காமல் வீட்டிற்க்குள் இருந்தபடியே பதில் கூறி வந்த நிலையில், போலீசார் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்ற போது, போலீசார் வீட்டிற்க்குள் வந்தால், குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வேன் என மதுமாலாவின் மாமியார் மிரட்டி வீட்டை உள் பக்கமாக பூட்டி கொண்டு மிரட்டும் தோனியில் பேசி வருவதால் போலீசாரும் உள்ளே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இருப்பினும் தனது மகனை அழைத்து செல்லாமல் போக மாட்டேன் என அவரது தாய் கணவரின் வீட்டின் முன்பு விடிய, விடிய தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.