சென்னை திருமங்கலத்தில் போலி போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் பெண் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இணைய வழியில் திருமணத்திற்கு பெண் தேடிவந்த ஆந்திராவைச் சேர்ந்த சுரேஷ் கண்ணா என்பவர், கடலூர் மாவட்டம் நெய்வேலியை  சேர்ந்த பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுரேஷ் கண்ணாவுக்கு வயது 35-க்கு மேல் என்பதை அறிந்த அப்பெண், திருமணப் பேச்சை பாதியிலேயே நிறுத்தியதாக தெரியவருகிறது. 

Continues below advertisement

போலியாக பதியப்பட்ட போக்சோ வழக்கு

இதன் காரணமாக பழிவாங்க நினைந்த சுரேஷ் கண்ணா, சென்னையை சேர்ந்த 2 சிறுமிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து அப்பெண்ணின் சகோதரரை ஹனிட்ராப் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் வசந்தராஜா மற்றும் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோரிடம் ரூ.5.50 லட்சம் பணத்தை கொடுத்து, போக்சோ வழக்குப் பதிய வைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. 

காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

இவ்விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில் போலியாக போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது உறுதியானதையடுத்து காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் காவலர் வசந்த் ராஜா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Continues below advertisement