“கொலை பண்ணிட்டேன் சார்” ஒரே நேரத்தில் பல நபருடன் உல்லாசம்.. பாக்கியலட்சுமிக்கு நேர்ந்த கொடூரம்
Chennai Crime: சென்னை பல்லாவரம் அருகே, காதலி பலருடன் தொடர்பு இருந்ததால் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"பாக்கியலட்சுமி அவரது வீட்டிலே சந்தித்து, மது அருந்தி பலமுறை இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்"
கணவரை பிரிந்து வாழும் பெண்
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அருள்நகர் மூன்றாவது தெரு பகுதியில் வசித்து வருபவர் பாக்கியலட்சுமி (33). பாக்கியலட்சுமி கணவரை பிரிந்து வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. பாக்கியலட்சுமி வீட்டில் இருந்தபடியே, பெல்ட் மற்றும் மணி பர்ஸ் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். கணவரைப் பிரிந்து வாழும் பாக்கியலட்சுமி, தனது இரண்டு குழந்தைகளுடன் அதே வீட்டில் வசித்து வருகிறார்.
Just In



எல்லையை தாண்டிய உறவு
அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த, தண்ணி லாரி டிரைவர் ஞானசித்தன் (38). மணி பர்ஸ் வாங்குவதற்காக பாக்கியலட்சுமி வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு இருவருக்கும் நட்பு மலர்ந்துள்ளது. நாளடைவில் இருவருடைய நட்பும், எல்லையை மீறி காதலாக மாறத் தொடங்கியுள்ளது. ஞானசித்தனுக்கு திருமணம் ஆகாததால், பாக்கியலட்சுமி உடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.
பாக்கியலட்சுமி வீட்டில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் குழந்தைகள் இல்லாத போது, பாக்கியலட்சுமியை சந்திக்க செல்லும் ஞானசித்தன் அவ்வப்போது தனிமையில் இருவதும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஞானசித்தன், பாக்கியலட்சுமியிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.
பாக்கியலட்சுமிக்கு பலருடன் தொடர்பு
பாக்கியலட்சுமி திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பாக்கியலட்சுமிக்கு வேறு இரண்டு நபர்களுடன் தொடர்பில் இருப்பது ஞானசித்தனுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பாக்கியலட்சுமியிடம் கேட்டுள்ளார். தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் வற்புறுத்தி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு பாக்கியலட்சுமி வீட்டிற்கு சென்ற ஞானசித்தன், இருவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, வேறு ஒருவரிடம் இருக்கும் பழக்கத்தை கைவிடுமாறு பாக்கியலட்சுமி உடன் வலியுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமாக இருந்த ஞானசித்தன், பர்ஸ் ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும், கடப்பா கல்லை எடுத்து பாக்கியலட்சுமி தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
போலீசில் சரண்
இதனால் பாக்கியலட்சுமி தலையில் பயங்கர காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே துடித்து பாக்கியலட்சுமி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஞானசித்தன் அங்கிருந்து தப்பித்து, சங்கர் நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கர் நகர் போலீசார், பாக்கியலட்சுமி உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். ஞான சிந்தனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.