தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பல துறைகளில் வளர்ந்துள்ள நிலையில், இணையதளங்களில் டேட்டிங் செயலிகளின் செயல்பாடுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பாலியல் தொழிலுக்கும் இந்த இணையதள செயலியை பலர் பயன்படுத்தி வருகின்றனர்.


கால்பாய்:


சமீப ஆண்டுகளாக ஆண்களும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதை கால்பாய் என்று குறிப்பிடுகின்றனர். சென்னையைச் சேர்ந்த  பெண் பொறியாளர் ஒருவர் இதுபோன்ற கால் பாய் செயலி ஒன்றை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளார். அந்த செயலியை பயன்படுத்தும்போது அதில் இளைஞர் ஒருவரின் புகைப்படம் வந்துள்ளது. அதைப்பார்த்த அந்த பெண்ணுக்கு அந்த இளைஞர் மீது விருப்பம் ஏற்பட்டுள்ளது.


இதையடுத்து, இந்த செயலியில் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொண்டனர். பின்னர், இருவரும் சந்தித்து நெருக்கமாக இருக்க முடிவு செய்துள்ளனர். இதனால், அந்த இளைஞர் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து அந்த இளம்பெண்ணை அழைத்துள்ளார்.


பறிபோன 4 சவரன் தங்க நகை:


இருவரும் அறையில் நெருக்கமாக இருந்தபோது வீட்டிற்கு இளம்பெண் செல்ல முயற்சித்தபோதுதான் அந்த பெண்ணின் தங்கநகை மாயமாகியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நகையை கால்பாயாக வந்த இளைஞர்தான் எடுததுச் சென்றிருப்பார் என்று அறிந்த அந்த இளம்பெண் அந்த இளைஞருக்கு போன் செய்துள்ளார். ஆனால், அந்த இளைஞரை தொடர்பு கொள்ள முயன்றபோது அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.


அப்போதுதான் அந்த இளைஞர் தன்னுடைய 4 சவரன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளது அந்த பெண்ணுக்குத் தெரியவந்துள்ளது. தங்கம் விலை உச்சத்திற்கு கொண்டு சென்று வரும் சூழலில்,  சுமார் 2.5 லட்சம் மதிப்பிலான நகையை கால்பாயிடம் பறிகொடுத்ததால் அந்த பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.


போலீஸ் விசாரணை:


பின்னர், திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்குச் சென்று நடந்த விவரங்களை முழுமையாக கூறி அந்த கால்பாய் இளைஞர் மீது புகார் அளித்துள்ளார். அந்த இளைஞரின் தொலைபேசி எண், புகைப்படத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கால்பாயிடம் உல்லாசம் அனுபவிக்கச் சென்ற பெண் நகையை பறிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமீபகாலமாக இதுபோன்ற டேட்டிங் செயலிகள் மூலமாக நகை மற்றும் பணத்தை பறிக்கும் கும்பல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நகை மற்றும் பணத்தை பறிகொடுத்தவர்கள் பலரும் வெளியில் கூறினால் தங்களுக்கு அவமானம் என்று புகார் கொடுக்காமல் இருந்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.