சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான் வயது (48). இவர் கடந்த 27ம் தேதி கிருஷ்ணகிரிக்கு காரில் வந்தபோது மாயமானார். அவரதுமனைவி பூர்ணிமா என்னுடைய காணவில்லை என கொடுத்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத் தினர். இதில் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதானை, பண விவகாரத்தில் சிலர் கொன்று, ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டியில் உள்ள மாந்தோப்பில் புதைத்தது தெரியவந்தது. 


இந்நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர் , இக்கொலையில் தொடர்புடைய பெரம்பலூர் சபரீஷ் வயது (42), மேட்டூர் மாதையன்குட்டை கோபிநாத் வயது (45), பெரம்பலூர் மணிவண்ணன் வயது (34), ஊத்தங்கரை தாலுகா கொடமாண்டப்பட்டி ரேணிகுண்டாஹள்ளி திருமால் வயது (36), பெங்களூருவைச் சேர்ந்த பிரசாத் வயது (45). லோகநாதன் வயது (45), சாமல்பட்டியை சேர்ந்த விசிக பிரமுகர் ஜிம் மோகன் வயது (40), மத்தூர் திருப்பதி வயது (35). சென்னை தி.நகர் வக்கீல் கிருஷ்ண குமார் வயது (43) ஆகிய 9 நபர்களை அழைத்து நேற்று முன்தினம் இரவு கைது  செய்தனர். இச்சம்பவம் குறித்து ஜனார்த்தன பிரதானின் சடலம் சாமல்பட்டி மாந்தோப்பில் மீட்கப்பட்டதால் சாமல்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில் . தற்போது, இந்த வழக்கு கிருஷ்ணகிரி நகர காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.


 




 


இந்நிலையில், கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான சபரீஷ் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து காவல்துறையினர் கூறியது: பெரம்பலூர் மாவட்டம் அரணாரை கிராமத்தில் வசித்து வந்த சபரீஷ், கடந்த ஒரு வருடத்திற்கு முன் சென்னைக்கு சென்று வாடகை வீட்டில் குடியேறியுள்ளார். அங்கு விளம்பர படங்கள் எடுக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததாகவும். அப்போது அங்குவந்த வழக்கறிஞர் கிருஷ்ணகுமாருடன் சபரீசுக்கு நண்பர்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் தனக்கு வங்கியில் ரூ.35 கோடி கடன் வாங்குவதற்கு உதவும் படி சபரீஷிடம் கேட்டுள்ளார்.


அதற்கு அவர், தனது நண்பரான ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதானை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இருவரும் ஜனரஞ்சன் பிரதானை சந்தித்த போது, ரூ.30 கோடிக்கு கடன் பெற்று  தருவதாகவும், அதற்கு கமிஷனாக முன்னதாகவே ரூ.3.50 கோடியை தனக்கு தர வேண்டும், எனவும் ஜனரஞ்சன் பிரதான் தெரிவித்துள்ளார். அதன்படி, ரூ.3.50 கோடியை ஜனரஞ்சனிடம் சபரீஷ் கொடுத்துவைத்துள்ளார் என்றுள்ளனர். ஆனால், அவர் கடன் வாங்கிக் கொடுக்கவில்லை. இதையடுத்து சபரீஷ் பெரம்பலூருக்கு வந்துவிட்டார்.




 


இந்நிலையில் சென்னை, ஐதராபாத் பகுதியில் பண மோசடியில் ஈடுபட்டதாக, ஜனரஞ்சன் பிரதானை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர் என்ற செய்தியை பார்த்த சபரீஷ், சிறைக்கு சென்று அவரை பார்த்துள்ளார். அப்போது தன்னை ஜாமீனில் எடுத்தால் உண்ணுடைய பணத்துக்கு ஏற்பாடு செய்வதாக கூறவே, ஜாமீனில் எடுக்க பண உதவி செய்துள்ளார். அதனைத்தொடர்ந்து , பணத்தை தான் தரும்படி கேட்டபோது, ஜனரஞ்சன் பிரதான் தராமல் இழுத்தடித்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணகுமாரிடம் சபரீஷ் தெரிவித்துள்ளாராம்.


இந்நிலையில், கிருஷ்ண கிரியில் ஒருவருக்கு சில கோடி ரூபாய் கடன் வேண்டும். என சபரீஷ் தெரிவித்துள்ளார். அவரை பார்க்க செல்லலாம் என ஜனரஞ்சன் பிரதானை அழைத்துக்கொண்டு, சாமல்பட்டிக்கு 3 நபர்களும் வந்தனர். அப்பகுதியை சேர்ந்த திருமால் என்பவரின் வீட்டில் அவர்கள் மது அருந்தியுள்ளனர். அப்போது ரூ.3.50 கோடி தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள், ஜனரஞ்சன் பிரதானை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் நண்பர்கள் உதவியுடன், அங்கிருந்து அவரது உடலை மாந்தோப்பில் புதைத்துள்ளனர். இவ்வாறு சபரீஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் கூறினர்.


இதையடுத்து கைது செய்யப்பட்ட 9 நபர்களையும், காவல்துறையினர் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபிரபு முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.  கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.