சென்னை எம்.கே.பி நகர் 14 வது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (68) இவரது கணவர் ஜானகிராமன் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் தனது மகனுடன் வசித்து வருகிறார். சென்ட்ரல் செல்வதற்காக ஜெயலட்சுமி தனது வீட்டில் இருந்து முல்லை நகர் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர் முக கவசத்துடன் ஜெயலட்சுமியிடம் வந்து நாங்கள் இருவரும் கொரோனா பரிசோதனை நிலையத்தில் இருந்து வருகிறோம்.
Watch video : ’மாநாடு பட டிக்கெட் வேணுமா?, ஒரு ஓட்டு போடு’ - நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் இளைஞர் காங்கிரஸ்..!
தற்போது அதிக அளவில் கொரோனா பரவி வருவதால் பொதுமக்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். உங்களிடமும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி அதே பகுதியில் தனியாக ஒரு இடத்திற்கு ஜெயலட்சுமியை அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்கள் இருவரும் மூதாட்டியிடம் நீங்கள் அணிந்திருக்கும் செயின் மற்றும் வலையல்களை உங்களது மணிபர்சில் கழட்டி வைத்துக் கொள்ளுங்கள் பரிசோதனை முடிந்ததும் போட்டுக் கொள்ளலாம் என்று கூறி ஜெயலட்சுமி அணிந்திருந்த 9 சவரன் செயின் 7 சவரன் வளையல் என மொத்தம் 16 சவரன் தங்க நகைகளை ஜெயலட்சுமியின் மணிபர்சில் வைத்துள்ளனர்.
அதன் பிறகு கொரோனா பரிசோதனை செய்வது போல நடித்து விட்டு உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை நீங்கள் செல்லலாம் என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர். சிறிது தூரம் நடந்து வந்த ஜெயலட்சுமி தனது மணி பர்சை பிரித்து பார்த்தபோது அதில் சிறிய அளவிலான வெங்காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கூச்சலிட்டு பொதுமக்களை அழைத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது இரண்டு பேரும் காணவில்லை உடனடியாக இதுகுறித்து ஜெயலட்சுமி எம்.கே.பி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் தகவலின் பேரில் அங்கு சென்ற எம்.கே.பி நகர் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். கொரோனா பரிசோதனை என்ற பெயரில் மூதாட்டியிடம் இருந்து 16 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் எம்.கே.பி நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.