செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த கணம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர் (65). இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது முதல் மனைவி மகாலட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். இந்நிலையில் தன்னுடன் சித்தாள் வேலை பார்க்கும் கணவனை இழந்து குழந்தையுடன் இருந்த தனலட்சுமி என்பவருக்கு மனோகர் ஆதரவு கொடுத்து வந்தார். 




இந்த தொடர்பு ஊர் முழுவதும் தெரியவர தனலட்சுமி மனோகரை  திருமணம் செய்து கொண்டார். இரண்டாம் திருமணம் செய்துகொண்ட தனலட்சுமி என்பவருக்கு தினேஷ் என்கிற ஒரு மகன் உள்ளார். மனைவியை பிரிந்த மனோகரும் கணவனை இழந்த தனலட்சுமியும் திருமணம் செய்துகொண்டு கடம்பூர் பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி இரவு மதுபோதையில் இருந்த மனோகர், தனலட்சுமியை தகாத வார்த்தைகளில் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். இரவு முழுவதும் சண்டை ஏற்பட்டதால் பொறுமையை இழந்த தனலட்சுமியின் மகன் மனோகரை கட்டையால் அடித்து கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் மனோகருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



மேலும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மனோகர் இறந்துவிட்டார். இந்நிலையில் கட்டையால் தாக்கிய தினேஷ் கைது செய்து வழக்குப்பதிவு செய்து மறைமலைநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வளர்ப்பு மகன் தந்தையை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




இது தொடர்பாக காவல்துறையினர் தெரிவிக்கையில், தனலட்சுமி, மனோகரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து தினேஷுக்கு ஆரம்பம் முதலே பிடிக்காமல் இருந்து வந்ததுள்ளது. தினேஷின் நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் பலர் தனலட்சுமி மற்றும் மனோகர் ஆகிய இருவரின் உறவை தவறாக பேசி வந்துள்ளனர். இதனால் தினேஷ் மனோகர் மீது கோபத்துடன் இருந்து வந்துள்ளார். இது ஒருபுறமிருக்க மனோகர் அடிக்கடி குடித்து விட்டு வந்து தனலட்சுமியிடம் சண்டை போட்டு வருவது தினேஷுக்கு இன்னும் கோபத்தை அதிகரித்துள்ளது. சம்பவம் நடந்த அன்று மனோகர் குடித்து விட்டு இரவு முழுவதும் சண்டையிட்டதால் கோபமடைந்த தினேஷ் கட்டையால் தாக்கி உள்ளார். அதில் காயமடைந்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தொடர்ந்து அவரை தற்போது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.


 


எல்லைக்காக சண்டையிடும் புலிகள்.. புலிகளோடு சண்டையிடும் சிறுத்தைகள்.. ஆச்சர்யத்தில் சுற்றுலா பயணிகள்!