செங்கல்பட்டு மாவட்டம், கிழக்குக் கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ள 56, நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், இவரது மகள் கவிதா வயது 17(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் நல்லூர் பகுதியில்இருந்து , ஷேர் ஆட்டோ மூலம் பள்ளிக்குச் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் இன்று வழக்கம் போல ஷேர் ஆட்டோவிற்காக வீட்டின் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில் பள்ளி மாணவி காத்திருந்தார்.
அப்பொழுது ஸ்கூட்டி வாகனத்தில் மூன்று மர்ம இளைஞர்கள் அங்கு வந்துள்ளனர். இளைஞர்கள் மாணவியிடம் பேச முயற்சி செய்து ,கையில் இருந்த துண்டு சீட்டு ஒன்றை கொடுக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு அந்த மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கையில் எடுத்து வந்த பிளேடு போன்ற கூர்மையான ஆயுதத்தை வைத்து மாணவியின் கழுத்தை அறுத்துள்ளனர்.
இதனை அடுத்து மாணவி செய்வதறி தெரியாமல் அலறி கத்தி கூச்சலிட்டு உள்ளார். மேலும் கழுத்தில் இருந்து ரத்தம் வெளியேறியதால் மாணவி சிறிது நேரம் மயக்க நிலைக்கு சென்றுள்ளார். ஊரிலிருந்து அவர்கள் உடனடியாக அந்த மூன்று இளைஞர்களை பிடிக்கும் முயற்சி செய்தபோது இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த மாணவியை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மாணவி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த சூனாம்பேடு போலீசார் தப்பி ஓடிய மூன்று பேரை வலை வீசி தேடி வருகின்றனர். மாணவியை மர்ம நபர்கள் மூன்று பேர் கழுத்தை அறுத்ததற்கு காரணம் குறித்தும், குடும்ப பிரச்னை காரணமாக திட்டமிட்டு யாராவது இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்