சென்னை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட கோர விபத்து. மேலும் மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.சுப நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நள்ளிரவில் வீடு திரும்பிய குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சோகம்.


சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை 


ஜிஎஸ்டி சாலை என அழைக்கக்கூடிய சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது விபத்து ஏற்படுவது வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. விபத்து ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முறையாக செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. இந்தநிலையில் சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் நடைபெற்ற விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பயங்கர விபத்து


செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் திருத்தேரி சிக்னலில் நின்றுக்கொண்டிந்த, கார் மீது பின்னால் வந்த கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுக்கியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 


போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து காரில் சிக்கிய 6 பேரை மீட்டனர். இதில் சரவணன், அய்யனார், மற்றும் ஒரு குழந்தை என மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த மேலும் மூன்று பேரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மூன்று பேர் உயிரிழப்பு


மதுரை சேர்ந்த 6 பேர் சென்னை துரைப்பாக்கத்தில் உறவினர்கள் நிகழ்ச்சி சென்று மீண்டும், மதுரை செல்லும் போது விபத்து நடந்துள்ளது. சிங்கப்பெருமாள் கோவில் அருகே சிக்னலில் நின்றுக்கொண்டிருந்த கார் மீது, பின்னால் வந்த கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது விபத்து காரணமாக, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.