23 சவரன் தங்க நகை கொள்ளை
சென்னை கேளம்பாக்கம் ஒட்டி உள்ள படூர் வீராணம் சாலை பாரதியார் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் இளையராஜா வயது 32, அவரது மனைவி மஞ்சுளா மற்றும் அவர்களது 2 வயது குழந்தை ஆகியோர் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இளையராஜா எலக்ட்ரிஷன் ஆக தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நிலையில் கடந்த 16ஆம் தேதி பணிக்கு சென்றுள்ளார். அவர்களின் மனைவி மஞ்சுளா காலை 10 மணியளவில் 2 வயது குழந்தையை அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். மதியம் 1 மணிக்கு மேல் குழந்தை அழைத்து வந்து பார்த்தபோது வீட்டின் கதவு மற்றும் பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு பீரோ லாக்கரில் இருந்த 23 சவரன் தங்க நகை இரண்டு லட்சம் ரூபாய் ரொக்க பணம் மர்ம நபர்களால், கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
260 இடங்களில் சிசிடிவி காட்சி..
பின்னர் காவல்துறையுடன் புகார் அளித்ததின் பேரில். கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் கிளாட்சன் ஜோஸ் தலைமையில் குற்றவாளியை பிடிக்க 3-தனிப்படை அமைத்து, சாலைகளில் உள்ள சிசிடிவி கட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டினர். பட்டபகலில் படூர் பகுதியில் வீட்டில் கொள்ளையடித்த குற்றவாளி ஓ.எம். ஆர் சாலை கேளம்பாக்கம் - வண்டலூர் வழியாக சென்னை சென்றது சிசிடிவி காட்சியில் பதிவானது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் குற்றவாளி பயன்படுத்திய வாகன எண் வைத்து தேடியபோது ஏற்கனவே பகல் நேரத்தில் மேலகோட்டையூர், படூர், தாழம்பூர் நாவலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகனம் திருட்டு, வீடு புகுந்து கொள்ளை, உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. 260 இடங்களில் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
3 தனிப்படை போலீசார்
வேலூர் தாக்கோலம் காவல் நிலையத்தில் குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்ட குற்றவாளி என்பதும் இறுதியாக , 2017 -இல் மேலக்கோட்டையூர் பகுதியில் பைக் திருடிய வழக்கில் கைது செய்யபட்டு சிறைக்கு சென்ற குற்றவாளியின், சொந்த ஊர் ராணிப்பேட்டை மாவட்டம் எலத்தூர் பகுதியை சேர்ந்த மதன் (வயது 31) உறுதி செய்தனர். பின்னர் 3 தனிப்படை போலீசார் சென்னை புறப்பட்ட போது குற்றவாளி சென்னையிலிருந்து வேலூர் சென்றதும், அங்கு நண்பர்களுடன் திருடிய நகை பணம் வைத்து ஜாலியாக இருந்துள்ளார். அப்போது போலீசார் வேலூர் வருவததை அறிந்த குற்றவாளி தன்னை காவல்துறை நெருங்கியதை அறிந்து, அங்கிருந்து மீண்டும் சென்னை வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்கெட்ச் போட்ட போலீஸ்
இந்தநிலையில், கடந்த 15 நாட்களாக போலீசார், மதனை பிடிக்க பல்வேறு வகையில் முயற்சி செய்து வந்தனர். குற்றவாளி செல் ஃபோன் லொக்கேஷனை ட்ராக் செய்து கொண்டும் வந்தனர். சைபர் கிரைம் உதவியுடன் தரவுகளை அடிப்படையில், குற்றவாளி சுற்றித் திரியும் இடங்களில் சோதனையை அதிகரித்தனர். அப்போது சென்னையிலிருந்து வண்டலூர் வழியாக ஆட்டோவில், ஒரு பெண்ணை ஏற்றுக் கொண்டு வரும்போது காவல்துறையினர் வண்டலூர் சாலையில் கையும் காலமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் குற்றவாளிகளிடம் இருந்த ஆட்டோ பைக் 12 சவரன் தங்க நகை பறிமுதல் செய்தனர். இதில் ஏற்கனவே இரண்டு மாதத்துக்கு முன்பு தாழம்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஆட்டோ ஒன்று திருடி, அந்த ஆட்டோ எண் கூட மாற்றாமல் சென்னையில் வளம் வந்ததுள்ளதும், தற்போது திருடப்பட்ட ஆட்டோ உள்பட தங்க நகை மற்றும் குற்றவாளி பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்தனர். மதன் இவ்வாறு திருடப்படும் பணத்தை வைத்துக்கொண்டு, வெளிமாநிலங்களுக்கு சென்று நண்பர்களுடன் உல்லாச வாழ்க்கையும் வாழ்ந்து வந்துள்ளார் .பின்னர் குற்றவாளியை திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.