மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

 மனைவி மீது சந்தேகம்


 

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த சேலையூர் ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கணபதி (38). இவருக்கு திருமணமாகி கௌரி என்கிற மனைவி இருந்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகறாறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. கணவர்  கணபதிக்கு மனைவி மீது சந்தேகம் இருந்து வந்துள்ளது. கணவர் அடிக்கடி மனைவி கௌரியிடம் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். பலமுறை இரு குடும்பத்தினரும் இணைந்து இருவரையும் சேர்த்து வைத்து வந்துள்ளனர். மனைவிக்கு இடையே தொடர்ந்து தகராறு இருந்து வந்துள்ளது.

 


செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம்


 

காவல் நிலையத்தில் மனைவி புகார்  


இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மனைவி கௌரியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் கணபதி அவருடன் சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் சண்டை படிப்படியாக வளர்ந்து கைகலப்பில் மாறி உள்ளது. இதனால் கோபித்துக் கொண்ட கௌரி தனது அம்மாவை அழைத்துச் சென்று தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் மீது தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணைக்கு வருமாறு கௌரி மற்றும் கணபதி ஆகிய இருவரையும் காவல் நிலையம் வர சொல்லி உள்ளனர். மனைவி  தன்னிடம் சண்டை போட்டு கொண்டு,  தன்னை பற்றி  காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் கணவன் கடும் கோபத்தில் இருந்து உள்ளார். 

 


செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம்


 

இதனால் தாம்பரம் மகளிர் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த கௌரியை வழிமறித்த கணபதி தான் மறைத்து வைத்திருந்த திருப்புளியால் அவரது உடலில் சரமாரியாக குத்தி கிழித்துள்ளார். இதில் படுகாயமடைந்த கௌரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் சசிரேகா ஆஜரானார்.

 

 ஆயுள் தண்டனை


 

இந்த வழக்கின் மீதான விசாரணை நிறைவு பெற்ற நிலையில், கணபதி மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதியானதால் அவருக்கு, செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி  எழிலரசி குற்றவாளியான கணபதிக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழகினார். இந்த வழக்கு தொடர்பாக  பல்வேறு தரப்பு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டது.  குறிப்பாக காவல் நிலையத்தில் அப்பொழுது புகார் அளிக்க வந்த அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  அதேபோன்று  பெண்ணின் பெற்றோர் தரப்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  தொடர்ந்து விசாரணை அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில்,   ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம்



 காவல் நிலையத்தில் நடந்தேறிய கொடூரம்


காவல் நிலையத்தில் நடந்த ஏறிய இந்த கொடூர சம்பவம் , அப்பொழுது தமிழ்நாட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழ்நாட்டை உலுக்கிய இந்த கொலைச் சம்பவத்தில்,  குற்றவாளிக்கு  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.