செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சில நாட்களாக கொலைச் சம்பவங்கள் நடைபெறாத நிலையில், ஒரே இரவில் மூன்று கொலை சம்பவங்கள் நடைபெற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொலையில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலர் நகர் நகராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி இவரது மகன் விமல் மற்றும் அதே தெருவை சேர்ந்த முருகன் என்பவரது மகன் ஜெகன் இவர்கள் இருவரும் நண்பர்களாக உள்ளனர் இருவர் மீதும் மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு கொலை முயற்சி, வழிப்பறி, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது. இருவரும் காவல்துறையினரால் சரித்திர பதிவேடு குற்றவாளிகளாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு மறைமலைநகர் பகுதியில் சக நண்பர்களுடன் நடைபெற்ற பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் விமல், ஜெகன் ஆகியோர் பங்கேற்றுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கஞ்சா போதையில் சக நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் சக நண்பர்களே பயங்கர ஆயுதங்களுடன் பலமாக தாக்கி கொண்டுள்ளனர்.

இருவர் உயிரிழப்பு

இதில் விமல் மற்றும் ஜெகன் இருவருக்கும் தகர ஏற்பட்டு ஒருவருக்கொருவர் கல்லை தூக்கிப்போட்டு, ஆயுதங்களுடன் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்‌. அப்போது விமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அருகில் இருந்த பொதுமக்கள் ஜெகனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஜெகன் சிகிச்சை பலனின்றி ஜெகன் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மறைமலைநகர் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய கொலையாளிகளையும் தேடி வருகின்றனர். சென்னை அருகே நள்ளிரவில், நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மதுராந்தகத்தில் மற்றொரு சம்பவம்

இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த லோகேஷ் என்பவர், அப்பு மற்றும் அவரது உறவினரான திவாகர் ஆகிய இருவரும் இணைந்து முன்விரோத காரணமாக லோகேஷன் அடித்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய இருவரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்