மணமேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த மணமகள்..! திருமணத்திற்கு முன்பு நிகழ்ந்த சோகம்..!

ஆந்திராவில் திருமணம் நடைபெறுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்பு மணமகள் மணப்பந்தலிலே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஜனா. அவருக்கு வயது 22. பி.காம் பட்டதாரி ஆவார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீககுலத்தில் இருந்து ஹைதரபாத்திற்கு அவரது குடும்பத்தினர் குடிபெயர்ந்தனர்.  ஸ்ரீஜனாவிற்கும் விசாகப்பட்டினம் பி.எம்.பலேம் நகரத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது.

Continues below advertisement

இதையடுத்து, இவர்களது திருமணம் இந்த வாரம் நடைபெற இருந்த நிலையில் மணமகள் குடும்பத்தினர் கடந்த 7-ந் தேதி விசாகப்பட்டினத்திற்கு வந்திருந்தனர். மேலும், மணமகன் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த இடத்தில் ஸ்ரீஜனா குடும்பத்தினர் தங்கியிருந்தனர். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை ஸ்ரீஜனாவிற்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


ஸ்ரீஜனா உடல்நலம் தேறியதால் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சித் தொடங்கி சுமூகமாக நடைபெற்றுக் கொணடிருந்தது. சரியாக திருமணம் நடைபெறுவதற்கு 15 நிமிடங்கள் முன்பாக சரியாக 10 மணியளவில் திடீரென மணமகள் ஸ்ரீஜனா மணமேடைப் பந்தலிலே மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, அவர் உடனே ஏற்கனவே சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது நிலைமை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், ஸ்ரீஜனா சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.50 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். இது மணமகள் மற்றும் மணமகன் குடும்பத்தார் இடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஸ்ரீஜனாவின் மரணம் தொடர்பாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் ஸ்ரீஜனா விஷம் அருந்தியதாக தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், போலீசார் விஷப்பழத்திற்கான விதையை ஸ்ரீஜனாவின் கைப்பையில் இருந்து கண்டுபிடித்தனர். திருமணத்திற்காக ஸ்ரீஜனா மாதவிடாய் காலத்தை தாமதப்படுத்துவதற்காக மாத்திரைகளையும் சாப்பிட்டுள்ளார் என்பது தெரியவந்தது.


உயிரிழந்த மணமகள் ஸ்ரீஜனாவின் தோழிகள் ஸ்ரீஜனாவின் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றதாக கூறினார். ஸ்ரீஜனாவின் பெற்றோர்களும் அவரது சம்மதத்துடனே திருமண ஏற்பாடுகள் செய்ததாக கூறினார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணமேடையிலே மணமகள் மணமகன் கண்முன் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola