Breaking Live : தமிழகத்தில் இன்று 56 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி..!
Breaking Live : தமிழகத்தில் இன்று 56 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 22 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 22 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் நாசர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாக்யராஜ் தோல்வி அடைந்தார். பாண்டவர் அணி சார்பில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.
நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் மீண்டும் வெற்றி பெற்றார். இதேபோல், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் கார்த்தியும் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
மணிப்பூர் மாநில முதலமைச்சராக பிரேன் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மணிப்பூரில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வென்ற நிலையில், இம்பாலில் இன்று நடைபெற்ற பாஜக எம்எல்ஏ கூட்டத்தில் பிரேன் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனை சந்தித்து ஆட்சி அமைக்க பிரேன் சிங் உரிமை கோரவுள்ளார்.
நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பிறகு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நாளை ஆஜராகிறார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம்.
ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கொடுத்த புகாரை முழுமையாக விசாரிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக் கழக தேர்வில் தாமதமாக விடைத்தாளை பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்தச் சூழலில் இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி,”தாமதமாக பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கும் மதிப்பெண் வழங்கப்படும். அவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டிருந்தால் அது தவறு. ஆன்லைன் தேர்வுகள் மாணவர்களின் தரத்தை மிகவும் குறைத்துள்ளது என்பதை மாணவர்கள் உணரவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. துணைத்தலைவர் பதவிக்கு விஷால் அணியின் பூச்சிமுருகன் முன்னிலை பெற்ற நிலையில் திடீரென வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் கொரோனா காரணமாக ஆன்லைனில் நடைபெற்றது. இந்தத் தேர்வில் தாமதாமாக விடைத்தாளை பதிவேற்றம் செய்த 10 ஆயிரம் பேருக்கு ஆப்சென்ட் போடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பழனி அருகே பயணிகள் ரயில் எஞ்சின் கோளாறு காரணமாக சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடுவழியிலே நின்று கொண்டிருக்கிறது. இதனால், பயணிகள் தவித்து வருகின்றனர். கோளாறை விரைந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, இன்று காலை முதல் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Background
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 6 ஆயிரத்து 80 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 2 ஆயிரத்து 75 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 71 நபர்கள் புதியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 16 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது. குணம் அடைவோரின் விகிதம் 98.73 சதவீதமாக உயர்ந்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -