மாகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியை சேர்ந்தவர் அஜய் பார்டெகி. 28 வயதான இவர், வெல்டிங் டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவரும் மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் செவிலியராக பணி புரிந்து வரும் 23 வயது பெண்ணும், கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் பேஸ்புக் மூலம் நட்பாக பழகி, காதலர்களாக மாறியுள்ளனர். இது பற்றி அவர்களின் குடும்பத்துக்கு தெரியவந்ததை அடுத்து, இருவரும் திருமணம் செய்ய இருந்தனர்.


இந்நிலையில் கடந்த 3 ம் தேதியன்று நாக்பூரின் சனோர் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜ்க்கு சென்றுள்ளனர். அங்கு அஜய் பார்டெகிவும், அவரது காதலியும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது இருவரும் உடலுறவுவில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, பார்டெகி மயங்கி விழுந்துள்ளார். 


இதனால் பதறிப் போன அந்த பெண், வெளியே சென்று விடுதி ஊழியர்களிடம் பார்டெகி நிலை குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து பார்டெகி உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பார்டேகி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சனோர் காவல் நிலைய காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் சனோர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், ”இருவரும் நெருக்கமாக இருந்தபோது பார்டெகி மயங்கி விழுந்ததாக அந்த பெண் கூறினார். உயிரிழந்தவர் எந்த மருந்தையும் உட்கொண்டதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. போதைப் பொருள் பொட்டலங்கள் என எந்த விதமான பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த பெண் முன்னிலையிலும் அவர் எந்த மருந்தையும் சாப்பிடவில்லை. அவர் எந்த சிகிச்சையிலும் இல்லை. திடீர் மாரடைப்பே உயிரிழப்பிற்கு காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர்.



இது குறித்து இதய நோய் நிபுணர்கள் கூறுகையில், ”உடலுறவில் ஈடுபடும் போது மாரடைப்பு ஏற்படுவது அரிது, ஆனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. இளைஞர்களிடம், கண்டறியப்படாத இதயநோய் பாதிப்பு இருக்கும்பட்சத்தில், கடினமான வேலைகளைச் செய்யும்போதோ, உடலுறவின்போதோ இப்படி நிகழலாம். ரத்தக் குழாய் சார்ந்த தமனி நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாத போது, உடலுறவு போன்ற கடுமையான நடவடிக்கைகளின் போது மரணம் நிகழலாம். ஏனெனில் உடலுறவு கொள்ளும் போதும், மற்ற கடுமையான பணிகளின் போதும் இதயத்திற்கு அதிக அளவு இரத்தமும் ஆக்ஸிஜனும் தேவைப்படுகிறது. அப்போது அதன் தேவை பூர்த்தி செய்யப்படாவிடில், மோசமான விளைவுகளும், சில நேரங்களுல் மரணமும் நிகழும். இது போன்ற விளைவுகளை தவிர்க்க முறையாக உணவு எடுத்துக் கொண்டு நன்றாக தூங்கியும், உடற்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண