செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் தற்கொலை செய்து கொண்ட சிறுவனின் கண்கள் தானம் வழங்கப்பட்டது

 


டியூஷனுக்கு போக சொல்லி

 

செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே கூடலூர் தொகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 37 மனைவி சித்ரா இவர்களது மகன்  எழில்குமரன் (14). இவர் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். தினமும் பள்ளி முடிந்ததும் டியூஷனுக்கு செல்வது வழக்கம். அதேபோல எப்போதும் போல பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த எழில்குமரனுக்கு தாய் சாப்பாடு போட்டு வைத்துவிட்டு சாப்பிட்டதும் டியூஷனுக்கு போக சொல்லி ,துணி துவைக்க சென்று விட்டதாக கூறப்படுகிறது.

 

அதிர்ச்சி அடைந்து

 

தொடர்ந்து துணியை காய வைத்து விட்டு படுக்கையறைக்குச் சென்ற சித்திரா எழில்குமரன் மின்விசிறியில், துப்பட்டாவை கொண்டு தூக்கில் சடலமாக தொடங்கியதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தூக்கில் தொங்கிய எழில் குமரனை மீட்டனர். பின்பு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோதித்த மருத்துவர் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மறைமலைநகர் காவல் துறையினர் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்

 

"என் மகனை, தான் நான் இழந்து விட்டேன் "

 

பின்பு ஒன்பதாம் வகுப்பு பயிலும் 14 வயது பள்ளி மாணவனுக்கு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவருக்கு என்ன மன அழுத்தம் என தற்கொலைக்கான காரணம் குறித்து மறைமொழி நகர் காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

 

சிறுவனின் கண்கள் தானம்

 


இந்த நிலையில ”என் மகனை தான் நான் இழந்து விட்டேன். ஆனால் அவனது கண்கள் வாழும்” என பெற்றோர் தெரிவித்தனர். கண்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அந்த சிறுவன் தானமாக கொடுத்துள்ளார். இந்த சம்பவம் கூடலூர் பகுதியில்  மரணத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவனின் கண்கள் தானம் வழங்கப்பட்டதை தொடர்ந்து சம்பவம் குறித்து காவல்துறையினர் சந்தேக மரணம் என, வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது


.



Suicidal Trigger Warning.

 

 

 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

 

 

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)