கடலூர் அருகே ஈச்சங்காடு பகுதியில், வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் போலீசார் விசாரணையில் நண்பன் கொலை செய்தது அம்பலமானது.

 

கடலூர் முதுநகர் அருகே உள்ள ஈச்சங்காடு மேட்டு தெருவை சேர்ந்தவர் பழனி மகன் எலி என்கிற கிருஷ்ணமூர்த்தி (28). இவர் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த போது கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக ஒருவர் கழுத்தில் வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கிருஷ்ணமூர்த்தி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

 

இதுகுறித்து தகவலறிந்த கடலூர் துறைமுகம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.



 

முன்விரோதத்தின் காரணமாக அவர் படுகொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் உடன் பழகி வந்த நண்பன் குமரேசன் என்பவரே கிருஷ்ணமூர்த்தி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

 

 கிருஷ்ணமூர்த்தி குமரேசன் இருவரும்  நண்பாக பழகி வந்து உள்ளனர். இருவரும் சேர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதும் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாகவும் கூறப்படுகிறது,

 

குமரேசன் என்பவருக்கு திருமணம் ஆகி இருந்த நிலையில், வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும் அந்த பெண்ணை தனது ஆசைக்கு கிருஷ்ணமூர்த்தி கேட்டதால் ஆத்திரமடைந்து குமரேசன் கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.