வீடு புகுந்து மூதாட்டி மீது தாக்குதல் நடத்திய வழக்கில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான தந்தை மகன் இருவர் உள்ளிட்ட ஆறு பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.




மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவேள்விக்குடி கிராமத்தைச் சேர்ந்த தங்கசாமி என்பவரது மனைவி 62 வயதான மீனாட்சியை, அவரது வீட்டின் உள்நுழைந்து கடந்த 2012 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 -ஆம் தேதி  கும்பல் ஒன்று தாக்கல் நடத்தியுள்ளது. அந்த தாக்குதலில்,  காயமடைந்து மீனாட்சி குத்தாலம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தங்கசாமியின் மகன் அதிமுகவில் இணைய இருந்ததால், இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்பட்டது. 


Udhayanidhi Stalin: துணை முதல்வரா? பொறுப்பு முதல்வரா? - அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அடுத்த பாய்ச்சல்




மீனாட்சியை தாக்கிய வழக்கில் பிச்சைமுத்து மகன்கள் பி.சந்திரசேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.கல்யாணம், கோவிந்தராஜ் மற்றும்  குத்தாலம் பி.கல்யாணம் அவரது மகன்கள் குத்தாலம் க.அன்பழகன், கடலங்குடி  ஊராட்சி மன்ற தலைவர் க.அறிவழகன் மற்றும் மனோகர், ரவி உள்ளிட்டோர் மீது குத்தாலம் காவல் நிலையத்தில், இந்திய தண்டனைச் சட்டம் 147, 294 (பி), 324 மற்றும் 506/2 ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மயிலாடுதுறை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.  இந்த வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி கலைவாணி நேற்று மாலை தீர்ப்பு வழங்கினார். அதன்படி குற்றவாளிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Exclusive : முதலமைச்சர் மகன் என்பதால்தான் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி தரப்படுகிறது - வானதி சீனிவாசன்





தண்டனையை ஒத்தி வைக்கக் கோரி அளிக்கப்பட்ட மனுவின் மீது ஆணை பிறப்பித்த நீதிமன்றம், வழக்கின் மேல்முறையீட்டுக்காக ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உள்ளது. மூதாட்டி தாக்கப்பட்ட வழக்கில் ஆளுங்கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான தந்தை மகன் இருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிகழ்வு மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான குத்தாலம் பி.கல்யாணம் தற்போது கட்சியின் உயர்மட்ட செயல் திட்டக்குழு உறுப்பினராக உள்ளார். இவரது மகன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான குத்தாலம் க.அன்பழகன் திமுக மாநில கொள்கை பரப்பு துணை செயலாளராகவும் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.


நெல்லை: காணாமல்போன திமுக கவுன்சிலர்களை கண்டுபிடித்து கொடுத்தால் பொங்கல் பரிசு - பாஜக கிண்டல் போஸ்டர்