குன்றத்தூர் அபிராமி, பிரியாணி மாஸ்டர் மீனாட்சி சுந்தரம் ஆகியோரின் வழக்கில் காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் இன்று (ஜூலை 24 ) தீர்ப்பு வழங்கியுள்ளது.

குன்றத்தூர் அபிராமி பின்னணி

கடலூர் மாவட்டத்தை சார்ந்தவர் விஜய். இவர் சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அதே ஓட்டலில் வரவேற்பாளராக அபிராமி பணியாற்றி வந்துள்ளார். இருவரும் ஒரே ஓட்டலில் பணிபுரிந்து வந்ததால், இருவருக்கும் நட்பு மலர்ந்து உள்ளது. இந்த நட்பு காதலாக மாறி உள்ளது. இருவிட்டார் சம்பந்தத்துடன் அபிராமி மற்றும் விஜய் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். 

விஜய் மற்றும் அபிராமி குன்றத்தூர் மூன்றாம் கட்டளைப் பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். விஜய், அபிராமி தம்பதியினருக்கு அஜய் (7), கார்னிகா (4) என இரண்டு குழந்தைகள் இருந்தனர். திருமணத்துக்குப் பிறகு அபிராமி வேலைக்கு செல்லாமல், குழந்தைகளை பராமரித்து வந்துள்ளார். திருமணத்திற்கு ஹோட்டலில் பணியாற்றிய விஜய், அதன் பிறகு ஏ.டி.எம்., பணம் நிரப்பும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

டிக் டாக் செயலியால் தடம் மாறிய அபிராமி 

அப்போது பிரபலமாக இருந்த டிக் டாக் செயலியில், வீடியோக்கள் போடுவது அபிராமியின் பழக்கமாக இருந்து வந்துள்ளது. டிக் டாக்கில் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக, மாதத்திற்கு ஒரு முறை அழகு நிலையம் சென்று தன்னை அழகுபடுத்திக் கொள்வதையும் வழக்கமாக வைத்து வந்துள்ளார்.

பிரியாணி காதலர் அபிராமி

விடுமுறை நாட்களில் விஜய் எப்போது குடும்பத்துடன் வெளியில் செல்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அபிராமிக்கு பிரியாணி பிடிக்கும் என்பதால், வெளியில் அழைத்துச் செல்லும்போதெல்லாம் அவருக்கு பிடித்த பிரியாணியை விஜய் வாங்கிக் கொடுப்பாராம். கடையில் மீனாட்சி சுந்தரம் என்பவர் வேலை பார்த்துள்ளார். அவருக்கும் அபிராமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

கள்ளக்காதலனுடன் உல்லாசம் 

டிக் டாக் மூலம் இருவரும் நண்பராக பழகி வந்துள்ளனர். நட்புக்காக நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. விஜய் பகலில் வீட்டில் இல்லாததை பயன்படுத்திய அபிராமி, ஆரம்பத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்று தனது கள்ளக்காதலன் சுந்தரத்துடன் உல்லாச வாழ்க்கை அனுபவித்து வந்துள்ளார். நாளடைவில் அபிராமி பிரியாணி ஆர்டர் செய்வதை போல் ஆர்டர் செய்து, சுந்தரத்தை வீட்டிற்கு வரவைத்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. 

கண்டித்த குடும்பத்தினர் 

விஜய் மற்றும் அபிராமி குடும்பத்தினருக்கு கள்ளக்காதல் விவகாரம் தெரிய வந்துள்ளது. அபிராமி குடும்பத்தினர் "உனக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது, எனவே இது போன்ற தவறான வழிக்கு செல்லாமல்" குடும்பத்தை நடத்துமாறு வழங்கியுள்ளனர். தொடர்ந்து இது தொடர்பாக விஜய் மற்றும் அபிராமி இருவருக்கும், சிறு சிறு தகராறுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

கொடூர முடிவு எடுத்த பிரியாணி அபிராமி

அபிராமி குடும்பத்தை மீறி தனது கள்ளக்காதலன் சுந்தரத்துடன் மகிழ்ச்சியாக வாழ முடிவு செய்தார். இதற்குத் தடையாக இருந்த கணவன் மற்றும் குழந்தைகளைக் கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர். இதனைத் தொடர்ந்து குன்றத்தூர் பகுதியில் உள்ள மருந்து கடையில், அபிராமி தூக்க மாத்திரைகளை வாங்கியுள்ளார். 

ஆகஸ்ட் 31 ஆம் தேதி இரவு, தனது கணவர் விஜய் மற்றும் தனது 2 குழந்தைகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். மறுநாள் காலை கணவர் விஜய் மற்றும் குழந்தை அஜய் ஆகிய இருவரும் மாத்திரை வீரியம் குறைவாக இருந்ததால் உயிர்பிழத்தனர். கார்னிகா மற்றும் காலை உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கணவன் வழக்கம்போல் வேலைக்கு கிளம்பி சென்றுள்ளார். அதன் பிறகு உயிருடன் இருந்த அஜய்க்கு மீண்டும், பாலில் மாத்திரை கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார்.  

தப்பி ஓடிய அபிராமி 

விஜய் வீட்டிற்கு வந்தால் அவரை கொலை செய்யலாம் என காத்துக்கொண்டிருந்து. விஜய் வருவதற்கு நேரம் ஆகியதால், கள்ளக்காதலனிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். கள்ளக்காதலன் சுந்தரம் குழந்தைகளை கொலை செய்து விட்டு நீண்ட நேரம் இருக்க வேண்டாம் கிளம்பி வா நாம் இங்கிருந்து சென்றுவிடலாம் என அழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்று, சென்னை கோயம்பேடு அருகே ஹோட்டலில் ரூம் எடுத்த தங்கியுள்ளனர்.

சிறையில் அடைப்பு

இந்த சம்பவம் தொடர்பாக கணவர் விஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கள்ளக்காதலன் சுந்தரத்துடன் தப்பிச் செல்ல முயன்ற அபிராமியை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். நாகர்கோயில் பகுதியில் சுந்தரம் கைது செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

விமர்சனத்தில் சிக்கிய பிரியாணி அபிராமி 

குழந்தையை கொலை செய்த பிறகு கள்ளக்காதலனுடன் whatsapp-ல் உரையாடிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மயக்கத்தில் இருந்த குழந்தையை மீண்டும் கொலை செய்தேன் என கள்ளக்காதலுடன், அபிராமி பேசியிருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

கள்ளக் காதலுக்காக பெற்ற குழந்தையை, தாய் கொலை செய்த சம்பவத்தால் பிரியாணி அபிராமி சமூக வலைதளத்தில் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டார். மேலும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அபிராமி செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். அபிராமி தாய் தந்தை ஆகிய வரும் அபிராமிக்கு எதிராக, இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறையில் மயங்கிய அபிராமி

செப்டம்பர் 26, சிறையில் இருந்த அபிராமி சரியாக சாப்பிடாமல், அழுதபடி மயங்கியும் விழுந்ததாக செய்திகள் வந்தன. அக்டோபர் 7, புழல் சிறையில் மனவேதனையில் இருந்த அபிராமி தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகின. டிசம்பர் 20 அபிராமியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. டிசம்பர் 21 அபிராமிக்கு எதிரான குற்றப்பத்திரிகை 200 பக்கங்களுடன் தாக்கல் செய்யப்பட்டது. 

வழக்கு விவரம் என்ன ?

இந்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில், நடைபெற்ற வந்தது. மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு, காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்திற்கு மகிளா நீதிமன்றம் கொண்டுவரப்பட்ட பிறகு செங்கல்பட்டில் இருந்த வழக்கு காஞ்சிபுரத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் (காஞ்சிபுரம் முதன்மை அமர்வு நீதிமன்றம்) நடைபெற்று வந்தது. கடைசியாக இன்று பிரியாணி அபிராமி வழக்கில் கள்ளக்காதலன் சுந்தரம் மற்றும் அபிராமி ஆகிய இருவருக்கும் மூச்சு உள்ளவரை சிறை என்ற தீர்ப்பை நீதிபதி செம்மல் வழங்கினார்.