Crime: பெங்ளூருவில் ரேபிடோ பைக்கில் பயணித்த பெண்ணை அந்த பைக் ஓட்டுநர் பாலியல் சீண்டல் செய்த சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ரேபிடோ சேவை:


ரேபிடோ பைக் டாக்சி மீதான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, வாகனத்தில் வரும் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் பெங்களூரு, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பதிவாகி உள்ளது.  இதனால், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இருப்பதில்லை எனவும் இந்த சேவையை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 


பெங்களூரு பெண் புகார்: 


கர்நாடக மாநிலம் பெங்களூர் டவுன் ஹாலில் நேற்று மணிப்பூர் வன்முறையை கண்டித்து போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர். அதில் இருந்து ஒரு பெண், ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு, ரேபிடோ பைக் டாக்சியை புக் செய்துள்ளார். ஆனால் அவரை அழைத்து செல்ல வந்த ஓட்டுநர்  பதிவு செய்த வண்டிக்கு பதிலாக வேறு வண்டியை எடுத்து வந்துள்ளார். பின்னர், ஆப் மூலம் ஓடிபியை சொல்லி, தொடர்ந்து அந்த நபருடன் பைக்கில் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். 




பின்னர், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் பைக் டாக்சி ஓட்டுநர் சுயஇன்பம் செய்துள்ளார். இதனால் அந்த பெண் பயணி அதிர்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும் அந்த பெண் கண்டுகொள்ளவில்லை. பின்னர், தொடர்ந்து பயணித்து அந்த பெண் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து, பைக் டாக்சி ஓட்டுநர் அந்த பெண்ணுக்கு போன் செய்துள்ளார். மேலும், வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் செய்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக பெண் புகார் அளித்துள்ளார். 


கைது:


இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அவரது ட்விட்டர் இந்த சம்பவம் குறித்து பதிவிட்டிருக்கிறார். அதில், "நான் பைக் டாக்சியில் பயணித்தபோது, அந்த ஓட்டுநர் சுயஇன்பம் மேற்கொண்டதாகவும், தனக்கு  கால் மற்றும் மெசேஜ் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்,  போன் செய்த பிறகு அந்த ஓட்டுநர் வாட்ஸ் ஆப்பில் செய்த மெசேஜை அவர் ஸ்கீரின் ஷாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.




அதில், அந்த ஓட்டுநர் மாலை 6.46 மணிக்கு பெண்ணுக்கு 'ஹாய்' என்ற அனுப்பியுள்ளார். இதனை பார்த்த அந்த பெண், "ஏன் எனக்கு போன் செய்கிறாய்? ஆன்லைனில் பணம் செலுத்திவிட்டேன். செயலியை செக் செய்யுங்கள் என தெரிவித்து இருக்கிறார். இதற்கு அந்த நபர் ’லவ் யூ' என குறிப்பிட்டிருந்தார். இதனை அடுத்து, சம்பந்தப்பட்ட பைக் டாக்சி ஓட்டுநர் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.