கரூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கரூர் பேருந்து நிலைய பகுதியில் இருந்து பாலு என்பவரின் ஆட்டோவில் கரூர் மில்கேட் பகுதியை சேர்ந்த செல்வராணி  வீட்டுக்கு சென்றுள்ளார். கரூர்- கோவை செல்லும் ரவுண்டானா அருகே உள்ள தனியார் மண்டப எதிரே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த போது, அப்போது அந்த நான்கு வழி சாலையில் எதிரே வந்த மினி வேன் பேருந்து வாகனம் தடுப்பு சுவர் நடுவில் திருப்பி செல்வதற்கான வளைத்து நிறுத்தி உள்ளார். அந்த சமயத்தில் எதிரே ஆட்டோ ஓட்டி வந்த பாலு பயத்தில் எங்கு மோதி விடுமோ என்று வேகமாக  இடது புறம் திருப்பினார்.


 




 


அப்போது இரு சக்கர வாகனம் சென்று கொண்டு இருந்ததால் எங்கே இருசக்கர வாகனத்தில் மோதி விடுமோ என்ற பயத்தில் மீண்டும் வலது புறமாக திரும்பியதில் ஆட்டோ   இழுத்துச் சென்று கவிழ்ந்தது. ஆட்டோவில் பயணித்த செல்வராணி ஈடுபாடுகளில் சிக்கியதால் அருகில் இருந்தவர்கள் மீட்டு  தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த மாதம் புத்தக திருவிழா நடைபெற்ற போது கரூர்-கோவை சாலையில் வாகன ஒட்டிகள் கடந்து செல்லும்போது கூட்ட நெரிசலை தவிர்க்க வகையில்  தனியார் மண்டபம் செல்லும் பாதைக்கு நேராக நடுவில் உள்ள தடுப்பு சுவரை அகற்றப்பட்டு,வாகனங்கள் இரு புறமும் செல்வதற்கு திருப்புமுனை (யூட்டேன்) தற்காலிகமாக அமைக்கப்பட்டது. அந்த இடத்தில் மினிவேன் பேருந்து திருப்பும்போது விபத்து ஏற்பட்டதை சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்துள்ளது.


 




எனவே, தற்போது தொடர் மழை பெய்து வருவதால் சாலை ஈரமாக உள்ளது, இரு சக்கரம், 3 சக்கரம் (ஆட்டோ) உள்ளிட்ட வாகனம் பாதுகாப்பாக ஓட்ட வேண்டும், அதே சமயத்தில் வாகனத்தை வேக கட்டுபாட்டுடன் பொறுமையாக இயக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். மழை காலம் என்பதால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட யடேர்ன் பாய்ன்டில் தடுப்பு சுவர் வைக்கவும் அதேபோல் விபத்து ஏற்படும் வகையில் உள்ள யுடேர்ன் இடங்களை பேரிக்கார்டு அமைத்து விபத்தை தடுக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.