விழுப்புரம்: ஆரோவில் அருகே போலீஸ் போல் நடித்து பொது மக்களை மடக்கி வசூல் வேட்டையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே நாவற்குளம் போலீஸ் செக்போஸ்ட் சந்திப்பில் நேற்று ஒரு வாலிபர் போலீஸ் எனக்கூறி, மப்டியில், அவ்வழியாக வாகனங்களில் வந்தோரை மடக்கி பிடித்து விசாரித்துள்ளார். அதில் சந்தேகமடைந்த பொது மக்கள் ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் அங்கு சென்று, அந்த வாலிபரை பிடித்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், காக்கி சட்டை, பெல்ட் இருப்பது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், நாவற்குளம் வசந்தபுரம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த விநாயகம் மகன் சத்தியசீலன் (வயது 24), 12ஆம் வகுப்பு படித்த இவர், கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.


போலீஸ் பணியில் சேர்ந்தால் அதிக பணம் கிடைக்கும் என ஆசைப்பட்ட அவர், தமிழக போலீஸ் துறையில் சேருவதற்கு இரண்டு முறை முயற்சி செய்துள்ளார். அதில் தோல்வியை கண்ட அவர், போலீஸ் ஆசையில், அவரே போலீஸ் உடை தயாரித்து, அப்பகுதியில் கடந்த 6 மாதங்களாக போலீஸ் உடையணிந்து, பொது மக்கள் மற்றும் வாகனங்களில் செல்வோரை வழிமறித்து வசூல் வேட்டையிலும் ஈடுபட்டது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் அவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நான்கு செட் போலீஸ் உடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண