விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே பாலப்பட்டு கிராமத்தில் உள்ள ஆறு ஏக்கர் நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மாவட்ட பதிவாளர் உடந்தையுடன்  அபகரிக்க முயற்சி. நிலத்தின் உரிமையாளர் மயிலம் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது


விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே பாதிராபுலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய சாமுண்டீஸ்வரி இவருக்கு குடும்ப சொத்தாக 6 ஏக்கர் 22 சென்ட் நிலம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலப்பட்டு கிராமத்தில் உள்ளது. அந்த இடத்தை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு  இலவச ஐஏஎஸ் அகாடமி பயிற்சி மையம், சீரடி சாய்பாபா கோவில், டாக்டர் அம்பேத்கர் அனைத்து மக்கள் சக்தி அறக்கட்டளை முதியோர் இல்லம் உள்ளிட்ட ஆறு அறக்கட்டளைக்கு பிரித்து 2017 ஆம் ஆண்டு பிரித்து பத்திரப் பதிவு செய்துள்ளார்.




இதற்கிடையில் பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் வழக்கறிஞர் விஜயன் உள்ளிட்டோர் சட்டத்திற்கு புறம்பாக போலி ஆவணங்கள் தயார் செய்து திண்டிவனம் பகுதியை சேர்ந்த மாவட்ட சார் பதிவாளர் பால சுப்பிரமணியம் உதவியுடன் பெயர் மாற்றம் செய்ய முயற்சிப்பதாக அந்த இடத்தின் உரிமையாளர் விஜய சாமுண்டீஸ்வரி சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டார். இதையடுத்து மயிலம்  காவல்துறை அதிகாரிகள் வருகை தந்து பேச்சுவார்த்தைக்கு பின்னர் முற்றுகை கைவிடப்பட்டது.



இதை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த இடத்தின் உரிமையாளர் இலவச கல்விக்காகவும், ஆதரவற்ற முதியோர்களுக்கு ஆகவும் அந்த இடத்தை இலவசமாக வழங்கி உள்ளேன். ஆனால் பாலப்படு கிராமத்தை சார்ந்த பெருமாள் மற்றும் விஜயன் ஆகியோர் மாவட்ட சார்பதிவாளர் பாலசுப்பிரமணியன் உதவியுடன் போலி ஆவணங்கள் மூலம் எனக்கு சொந்த மான இடத்தை  பத்திரப்பதிவு செய்ய முயற்சி இருக்க முயற்சிக்கிறார்கள். போலி ஆவணம் தயாரித்த பெருமாள் மீதும் திண்டிவனம் சார்பதிவாளர் பாலசுப்பிரமணியம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். மேலும் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல்கள் வருவதால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என அவர் கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர