Tiruvannamalai ATM Theft: திருவண்ணாமலை: ஏடிஎம் கொள்ளை விவகாரம்: முக்கிய குற்றவாளி கைது

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை விவகாரத்தில் அரியானாவைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

Continues below advertisement

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை விவகாரத்தில் அரியானாவைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

Continues below advertisement

கடந்த 12ஆம் தேதி அதிகாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நான்கு ஏ டி எம் மையங்களில் 72 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளை அடித்த விவகாரத்தில் ஆறு பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாகவும், திருவண்ணாமலை மாவட்ட எல்லைக்கு சென்று ஆந்திரா வழியாக கோலார் கேஜிஎஃப் பகுதிக்கு தப்பிச்சென்ற கொள்ளையர்கள் காவல்துறையினர் வருவதை அறிந்து அவர்களுடைய தொலைபேசியை ஸ்வீட்ச் ஆப் செய்து விட்டு அங்கு இருந்து வெளிமாநிலங்களுக்கு தப்பி சென்றுள்ளதாகவும், இந்த கொள்ளையர்கள் அசாம் பகுதியை சேர்ந்த நபர்கள் எனவும் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக கேஜிஎப் பகுதியில் சிறப்பு தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தங்க வைத்த கர்நாடக பகுதியை சேர்ந்த நபரை கைது செய்து திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது 1 மணிநேரத்திற்கு முன்பு அரியானா மாநிலம் நியூஜ் மாவட்டத்தை  சேர்ந்த  முக்கிய குற்றவாளி ஹிரிப்  (35) என்ற நபரை தனிப்படை போலீசார்  கைது செய்துள்ளனர். தலைமறைவான மற்றவர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

Continues below advertisement
Sponsored Links by Taboola