சேலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதி பொன்பாண்டியனை அலுவலக உதவியாளர் பிரகாஷ் கத்தியால் குத்திக்கொலை செய்ய முயற்சி செய்தார்.  பணியிட மாறுதலால் அலுவலக உதவியாளர் பிரகாஷ் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதற்கு காரணம் நீதிபதிதான் காரணம் என நினைத்து கொலை செய்ய முயன்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிரகாஷை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


நடந்தது என்ன?


சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைந்துள்ளது. இந்த நிலையில் 4 ம் எண் குற்றவியல் நீதிமன்றத்தில் பணியாற்றிய அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் இன்று திடீரென நீதிபதி பொன்பாண்டியை நீதிமன்ற வளாகத்திலேயே கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். இதில் சிறிய காயத்துடன் உயிர் தப்பிய நீதிபதியை போலீசார் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர்ந்து நீதிபதியை கத்தியால் குத்திய நீதிமன்ற ஊழியரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே அலுவலகப் பணி காரணமாக நீதிபதிக்கும் அலுவலக உதவியாளருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 


இதனுடைய பிரகாஷ்க்கு பணியிடமாறுதல் வழங்கப்பட்டதால் அவர் ஆத்திரமடைந்து நீதிபதியை கத்தியால் குத்தியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அலுவலக பணியாளர்களிடம் விசாரணை நடத்தினார். சேலத்தில் குற்றவியல் நீதிபதியை அலுவலக உதவியாளர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண