"காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், டிஎஸ்பி மாயமான சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது"

Continues below advertisement

டிஎஸ்பிஐ கைது செய்ய உத்தரவு 

காஞ்சிபுரம் பூசிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் நடந்த அடிதடி சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது ஒரு மாத காலமாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சங்கர் கணேஷ் வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல் உத்தரவிட்டார். இந்த எதிர்பாராத உத்தரவால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீதிமன்ற காவலராக பணிபுரிந்து வரும் லோகேஷ் என்பவரின் மாமனார் சிவகுமார் என்பவர் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். சிவகுமாருக்கும் பூசிவாக்கம் பகுதியில் வசித்து வரும் முருகன், 'சிமெண்ட் முருகன்' என்பவருக்கும் அப்பகுதியில், இடையே கடந்த மாதம் முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த அடிதடி சம்பவம் குறித்து முருகன், வாலாஜாபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Continues below advertisement

இந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், குறிப்பாக பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் (SC/ST Act) கீழ் நடவடிக்கை எடுக்க கோரியும், புகார் அளிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகியும் காவல் துறை தரப்பிலிருந்து எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும் தாமாக முன்வந்து வழக்கு எடுத்து நீதிபதி விசாரித்தார்.

நீதிபதி செம்மல் அதிரடி உத்தரவு

இந்த வழக்கு காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செம்மல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. புகாரின் தீவிரத்தன்மை குறித்தும், ஒரு மாத காலமாகியும் காவல் துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்தும் நீதிமன்றம் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். விசாரணையின் போது, புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய, காஞ்சிபுரம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சங்கர் கணேஷ்  நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதி குற்றம் சாட்டினர்.

மாயமான டிஎஸ்பி

புகார் மீது வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாகக் கூறி, நீதிபதி செம்மல், டிஎஸ்பி சங்கர் கணேஷ் உடனடியாகக் கைது செய்து, வரும் செப்டம்பர் 22, 2025 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். நீதிபதியின் இந்த அதிரடி உத்தரவு, நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவல் துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. உயர் பதவி வகிக்கும் ஒரு காவல் துறை அதிகாரி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவே முதல் முறையாகும். இந்த உத்தரவையடுத்து, காவல் துறை அதிகாரிகள் மத்தியில் கடும் பதற்றம் நிலவியது.

இந்தநிலையில் காவலர்கள் டிஎஸ்பிஐ சிறையில் அடைக்கு முயற்சி செய்தபோது அதிகளவு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது நீதிபதி செம்மல், வாகனத்தில் டிஎஸ்பி சங்கர் கணேஷ் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது காஞ்சிபுரம் கிளைச் சிறைக்கு அழித்துவரப்பட்டபோது காவல்துறையினர் ஒரு உதவியுடன் காவல் வாகனத்தில் ஏறி, டிஎஸ்பி மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மீண்டும் சிறைக்கு வந்த டிஎஸ்பி

சிறிது நேரம் மாயமாக இருந்த டிஎஸ்பி, மீண்டும் கிளைச் சிறையில் காத்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது தனக்கு உடல்நிலை குறைவு என தெரிவித்துள்ளார் ‌. இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகள் அவரை சோதித்ததில் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது உடல்நல குறைவு காரணமாக டிஎஸ்பி செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.