விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தனிமையில் உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுத்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பொன்பத்தி கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரரான சிலம்பரசனுக்கும் (35) இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும்  2010-ஆம் ஆண்டு முதல் சுமார் 13 வருடங்காலம் காதலித்து வந்துள்ளனர். ராணுவ பணியில் சேர்வதற்கு முன்பிருந்தே சிலம்பரசன் அந்தப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார்.


RB Udhayakumar : ”புரட்சி பயணம் போகட்டும்..போனாதான் தெரியும்!” ஓபிஎஸ்ஸை சாடிய ஆர்.பி.உதயகுமார்


இதன் பின்னர் ராணுவத்தில் பணியில் சேர்ந்த பின்பும் தொலைபேசியில் அடிக்கடி பேசி வந்த நிலையில் விடுமுறையில் வரும் போதெல்லாம் அந்தப்பெண்ணை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உள்ளார். மேலும் அவரது ரெட்டிபாளையம் வீட்டிற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்து தனிமையில் உறவு கொண்டு உல்லாசமாக இருந்துள்ளார். இதே போல் விடுமுறையில் வரும் போதெல்லாம் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.




இந்நிலையில் தற்போது விடுமுறையில் வந்துள்ள சிலம்பரசனிடம் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி  திருமணம் செய்து கொள்ளலாம் என கேட்ட நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த சிலம்பரசன் அந்தப்பெண்ணை ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் ராணுவ வீரரான சிலம்பரசன் மீது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தனிமையில் உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் சிலம்பரசனை கைது செய்தனர்.


போக்சோ சட்டம் என்றால் என்ன?


போக்சோ சட்டத்தின்படி குழந்தைகளிடம் பாலியல் ரீதியான செய்கைகள் காட்டுவது,  அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது, பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற கடந்த 2012-ஆம் ஆண்டில் உருவான சட்டமே போக்சோ சட்டம் (Protection of Children from Sexual Offence). சட்டம் இருந்தாலும் கூட இச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றன.


shashi tharoor : காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆகிறாரா சசிதரூர்? உள்கட்சித் தேர்தல் பரபரப்பு




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர