இந்தியாவில், ஆண்டு இறுதியில் கொலைகள் நடந்த எண்ணிக்கை குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) ஆய்வு செய்வது வழக்கமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான குற்றாய்வு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாட்டில் 2016 ஆண்டு முதல் 2021 வரை அதிக குற்ற சம்பவங்கள் நடைபெற்ற இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதிலும் குற்றங்களில் சிறார்கள் செய்த குற்ற எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே சென்றுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு, 48 கொலைக் குற்றங்களில் சிறார்கள் குற்றம் சாட்டப்பட்டு இருந்தனர். பிறகு 2017 ஆம் ஆண்டு 53 கொலைக் குற்றங்களும், 2018 ஆம் ஆண்டு அது 75 ஆகவும், 2019 ஆம் ஆண்டு அது 92 ஆகவும் , 2020 ஆம் ஆண்டு 104 குற்றங்களும் நடந்துள்ளது.
2016 ஆம் ஆண்டு 3 சதவீதம் மட்டுமே சிறார்கள் குற்றவாளிகளாக இருந்தனர். அது படிப்படியாக உயர்ந்து 2020 ஆம் ஆண்டில் 6.3 சதவீதம் உயர்ந்து உள்ளது. அதாவது 2017 ஆம் ஆண்டில் 3.4 சதவீகிதமாகவும், 2018 ஆம் ஆண்டில் 4.8 சதவீகிதமாகவும், 2019 ஆம் ஆண்டில் 5.3 சதவீகிதம், 2021 ஆம் ஆண்டில் 6.1 சதவீகிதமாக
அதிகரித்துள்ளது.
2016 ஆம் ஆண்டிலிருந்து, 2020 ஆம் ஆண்டு வரை குறைந்திருந்தது. 2016-ம் ஆண்டில் 30,450 கொலை வழக்குகளில் 2.9 சதவீகித சிறார்கள் குற்றம் சாட்டப்பட்டு இருந்தனர்.
இடைப்பட்ட 2017 ஆம் ஆண்டில் 28 ஆயிரத்து 653 கொலைகளில் 2.5 சதவீகிதம், எனக் குறைந்தது. 2018 ஆம் ஆண்டில் 29, 17 கொலைகளில் 2.6 சதவீகித சிறார்களும், 2019 ஆம் ஆண்டில் 28,918 கொலைகளில் 2.9 சதவீகிதம், 2020 a ஆண்டில் 29,193 கொலைகளில் 2.6 சதவீகித சிறார்களும் குற்றம் சாட்டப்பட்டனர்.
பின்னர் சற்று அதிகரித்துள்ளது. அதாவது 2016-ம் ஆண்டில் 30,450 கொலை வழக்குகளில் 2.9% சிறார்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில், 40 கொலை வழக்குகளும் சேர்க்கப்பட்டனர். திருச்சியில் 18 கொலை வழக்குகளும் பதிவாகியுள்ளது. இது ஏறக்குறைய கடந்த ஆண்டை விட 22.2 சதவீதமாகும்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் கொலைக் குற்றங்களில் அதிகமாக சிறார்கள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஐந்து நாள்களாக ஸ்டராம் ஆப்ரேஷன் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் குற்றசம்பங்களில் அதிகமாக ஈடுபட்டவர்களை கண்காணித்து கைது செய்து வருகின்றனர். இதனால் குற்ற சம்பவங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.