ஊரப்பாக்கம் அருகே கார் - ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் நண்பர்கள் இருவர் உயிரிழப்பு


செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே எதிர் திசையில் சென்று ஆம்னி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மறைமலைநகர் அடுத்த பொத்‌தேரி பகுதியை சேர்ந்த தீபக் (23), ரூபேஷ் (24) மற்றும் நவீன் (23) ஆகிய மூவரும் நண்பர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில் தீபக் தனது காரில் நண்பர்கள் மூவருடன் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஊரப்பாக்கம் அருகே கார் சென்றபோது தீபக்கின் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனை தாண்டி எதிர் திசையில் சென்ற ஆம்னி பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் தீபக், ரூபேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  மேலும் படுகாயம் அடைந்த நவீன் சிகிச்சைக்காக தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது


கடைக்குள் சென்ற அரசு பேருந்து. ! வாக்குவாதத்தில் பயணிகள் ஈடுபட்டதால் பரபரப்பு..!


செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதி மிக முக்கிய பகுதிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. நாள்தோறும் 30க்கும் மேற்பட்ட பேருந்துகள் செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் பகுதிக்கு இயக்கப்படுகிறது. இந்தநிலையில் திருக்கழுக்குன்றத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் சாலையில் வந்து கொண்டிருந்தது.


அப்பொழுது, அரசு பேருந்து செங்கல்பட்டு அடுத்துள்ள வல்லம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வெள்ளம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஹார்டுவேர்ஸ் கடை மீது மோதி,  விபத்துக்குள்ளானது


கடை மீது பேருந்து மோதியதால் கடையில் இருந்த பல பொருட்கள் சேதம் அடைந்தது. மோதுவதற்கு முன்பு பேருந்து சற்று வேகம் குறைந்ததால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. கடை சேதம் அடைந்திருந்தாலும் உள்ளே சென்ற பயணிகளுக்கு, எந்தவித காயமும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர்த்த பின்னர். இந்த விபத்து காரணமாக பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர் மீது தவறு இருப்பதாக கூறி பயணிகள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.