திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரது தாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த பெண்ணுடன் இவரது தந்தை, அண்ணன், தங்கை, தம்பி ஆகியோருடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் கடந்த சில தினங்களாக சோர்வடைந்து காணப்பட்டுள்ளார். இதனால் அவரை அவரது உறவினர் பரிசோதனை செய்துள்ளனர் . அப்போது இளம் பெண் 5 மாதம் கருவுற்று இருப்பது தெரியவந்துள்ளது.


 



இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண்ணின் தந்தை நேற்று திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இளம்பெண் தனது உறவினர்களுடன் கடந்த 5 மாதத்திற்கு முன்பு  ஆடு மேய்க்கச் சென்றபோது திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் (60), என்னும் குற்றவாளி இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.  மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் தற்போது  5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய ஊசாம்பாடி கிராமத்தை சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் பரசுராமன் மீது திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


 



இந்நிலையில், Abp Nadu செய்தியின் எதிரொலியால், திருவண்ணாமலை சேர்ந்த மாற்றுத்திறனாளி   இளம்பெண்ணை 5 மாத கர்ப்பமாக்கிய அதே பகுதியை சேர்ந்த வயதான முதியவரால் வன்புணர்வு செய்யப்பட்டார் என அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்றவழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


 



 


மேற்படி முதல் தகவல் அறிக்கையை பார்வையிட்டதில் இந்திய தண்டனை சட்டம் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அறியமுடிகிறது. மேற்கண்ட பிரிவில், சம்மதம் அளிக்காத பெண்ணை வன்புணர்வு செய்வது மற்றும் பல முறை வன்புணர்வு செய்வது ஆகிய குற்றங்களுக்காக உடனடியாக குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தேவையான மருத்துவ மற்றும் உளவியல் சார்ந்த உதவிகள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது .



பாதிக்கப்பட்டவர் பெண் மாற்றுத் திறனாளி என்பதால் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் என்ற முறையில் தாமாக முன்வந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம் கீழ், தகுந்த நிலை அறிக்கையை குறித்த காலத்திற்குள், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட சமூக நல அலுவலர் உள்ளிட்டோர் ஜுன்-4 ஆம் தேதிக்குள் எழுத்துபூர்வ பதில் அளிக்க மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.