திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் தேவிகாபுரம் ஆரணி சாலையில், கூட்டுறவு நகர வங்கி ஆரணி கிளை இயங்கி வருகின்றது. இந்த வங்கியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வங்கி கணக்கு வைத்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டில் வங்கியின் மேலாளராக ஆரணியை சேர்ந்த லிங்கப்பா என்பவரும் நகை மதிப்பீட்டாளராக மோகன் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வங்கியில் பணிபுரிந்து வந்தனர். மேலும் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பிரதான கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் 5 சவரன் தங்க நகை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.


இதனால் வங்கி மதிப்பீட்டாளர் மோகன் என்பவர் சுமார் 8.4 கிலோ தங்க நகைக்கு பதிலாக போலியாக நகை வைத்து, சுமார் 2.39 கோடி ரூபாய் பணத்தை கையாடல் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.இந்த சம்பவம் குறித்து கடந்த 27.10.21ல் செய்யார் துணை பதிவாளர் கமலக்கண்ணன் சென்னையில் உள்ள வணிக குற்ற புலனாய்வு பிரிவில் புகார் செய்தார்.


 




 


இதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை இணை பதிவாளராக அப்போதைய அதிகாரி ராஜ்குமார் விசாரணை நடத்தி, ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் மேலாளர் லிங்கப்பா, காசாளர் ஜெகதீசன், கிளார்க் சரவணன், நகை மதிப்பீட்டாளர் மோகன் ஆகிய 4 நபர்களையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.மேலும் ஆரணி நகர வங்கியின் கூட்டுறவு நிர்வாக தலைவர் அதிமுகவை சேர்ந்த நகர செயலாளர் அசோக்குமார், துணை தலைவர் ஏ.ஜி.ஆனந்த் ஆகிய இருவரிடமும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  கடந்த( 11.03.22 )அன்று நகர கூட்டுறவு வங்கி மேலாளர் லிங்கப்பா மற்றும் கூட்டுறவு சங்க தலைவர் அசோக்குமார் உள்ளிட்ட 4 நபர்களையும் வணிக குற்ற புலனாய்வு பிரிவுகாவல்துறையினர் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


 




 


அதனைத்தொடர்ந்து புதிய ஆரணி கூட்டுறவு வங்கி தலைவராக ஏ.ஜி.ஆனந்த் நியமிக்கபட்டார். அதன் பிறகு துறை ரீதியான விசாரணை நடைப்பெற்று வந்தது. இதனை தொடர்ந்து ஆரணி நகர கூட்டுறவு சங்கத்தில் கையாடல் மற்றும் ஊழல் செய்தது நிரூபணம் செய்யப்பட்டதால், நிர்வாகக்குழு கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கூட்டறவு சங்க தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் தகவல்கள் அளிக்கப்பட்டு கையெழுத்து பெறப்பட்டுள்ளது. என திருவண்ணாமலை மாவட்ட இணை பதிவாளர் நடராஜன் தெரிவித்துள்ளார். மேலும் மேளாலர் லிங்கப்பன் , காசாளர் ஜெகதீசன், நகை மதிப்பிட்டாளர் மோகன் ஆகியோரை நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்தது வந்த ஊழல் ஆகியவை குற்றச்சாட்டுகள் முடிவுக்கு வந்தது. இந்த சம்பவம் ஆரணி பொதுமக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.