மேலும் அறிய
Advertisement
’திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை’- இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை...!
’’இரவு நான் உன்னை தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று கூறி, மாரிமுத்து அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்’’
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 2018 ஆம் ஆண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக கோயம்புத்தூரில் உள்ள தனியார் பஞ்சு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார், அதே ஆலையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வீரலூரை சேர்ந்த ஏழுமலை அவர்களின் மகன் மாரிமுத்து (25) என்பவரும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது இருவருக்ம் ஒரே இடத்தில் வேலை செய்து வந்ததால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பேசி பழகி வந்தனர்.
இதையடுத்து மாரிமுத்து அந்த சிறுமியிடம் அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணிடம் பேசி வந்துள்ளார், இந்த விவகாரம் ஒரு கட்டத்தில் சிறுமியின் தாயாருக்கு தெரிய வந்தது, பின் அவர் ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்து சிறுமியினை கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் மலைமேடு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அனுப்பி அங்கே தங்க வைத்தார்.
அந்த சிறுமி அங்கு 15 நாட்களாக தங்கி இருந்த நிலையில், இதை எப்படியோ அறிந்த கொண்ட மாரிமுத்து கடந்த 7.7.2018 அன்று மலைமேடு கிராமத்திற்கு வந்து சிறுமியிடம் பேசி கடத்தி சென்றுள்ளார். பின்னர் அவரை தனது வீட்டிற்கு அழைத்து சென்று யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துள்ளார், பின் மறுநாள் இரவு நான் உன்னை தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று கூறி, மாரிமுத்து அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார், இதுபற்றி சிறுமியின் உறவினர்கள் ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இத்தனை ஆண்டுகளாக நடந்து வந்தது சிறுமியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் நீதி கிடைக்காமல் தவித்து வந்தனர்.
பின் தற்பொழுது மூன்று வருடங்களுக்கு பின் இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் மாரிமுத்து மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.
தற்பொழுது சில காலமாக அனைத்து பகுதிகளிலும் பாலியல் குற்றங்களானது அதிகரித்து கொண்டே வருகிறது, அதுவும் குறிப்பாக இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் இன்னும் அதிகமான புகார்கள் எழுந்துள்ளன ஆதலால் பெற்றோர்கள் தங்களுது பிள்ளைகளை பத்திரமாகவும் யாரிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என அறிவுரை கூறி வளர்க்க வேண்டும்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion