ஆரணி அருகே குடும்ப தகராறு காரணமாக பிரிந்த சென்ற மனைவியை சேர்த்து வைக்க கோரி 100 அடி உயரமுள்ள நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த உள்ள பன்னிரண்டு புத்தூர் கிராமத்தை சேர்ந்த கூலிதொழிலாளி மதன் என்பவருக்கும் வெட்டியாந்தொழுவம் கிராமத்தை சேர்ந்த ராஜா மகள் யுவராணி என்பவரும் சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். சில நாட்களிலேயே இருவருடைய குடும்பத்திற்கும் இவர்களுடைய காதல் தெரியவந்துள்ளது. பின்னர் இருக்குடும்பத்தினரும் மதனுக்கும் யுவராணிக்கும் காதல் திருமணம் செய்துவைத்துள்ளனர். இந்த காதல் தம்பதியினருக்கு லிக்கிதா வயது (10), ரித்திகா வயது (8), ஷாஷதிகா வயது (6) , என்ற 3 மகளும் அஸ்வத் என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் யுவராணி அதே கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சத்துணவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே குடும்ப வேறுபாடு காரணமாக சின்ன சின்ன தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறு காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு யுவராணி தற்போது குன்னத்தூர் கிராமத்தில் தனியாக வசித்து வருகின்றார்.
இதனைத்தொடர்ந்து கணவன் மதன் ஆரணி தாலுக்கா காவல்நிலையத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக தன்னுடைய மனைவி காணாமல் போய்விட்டதாக புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் யுவராணியை கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதன் பின்பு யுவராணி ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கணவன் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறி புகார் அளித்துள்ளார். அதன் பிறகு கணவன் மனைவி இருவரையும் அழைத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி இருவரையும் சேர்ந்து வாழக்கூறி அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இதனால் மனமுடைந்த வாலிபர் மதன் இன்று தன்னுடைய சொந்த கிராமமான பன்னிரண்டு புத்துர் கிராமத்தில் உள்ள புதியதாக கட்டப்பட்ட பெரிய நீர்நிலை தேக்க தொட்டி மீது ஏறி தற்கொலை செய்து கொல்ல போவதாக கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மதனை கீழே இறங்கி வருமாறு கூறியுள்ளனர். ஆனால் மதன் கீழே இறக்கி வர மறுத்துள்ளார்.
அதன் பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் ஆரணி காவல்நிலைத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் ஆரணி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிசந்திரன் மற்றும் தீயணைப்பு துறையினர் நேரில் வந்து மதனை கீழே இறங்கி வரகூறி சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் மதன் கீழே இறங்கி வர மறுத்துள்ளார். தொடர்ந்து தன்னுடைய மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி என கோரிக்கை விடுத்தார். கோரிக்கையை ஏற்ற காவல்துறையினர் குடும்பத்தை சேர்த்து வைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிசந்திரன் உறுதியளித்தன் பேரில் மதன் போராட்டத்தை கைவிட்டு இறங்கி வந்தார்.
ஆரணி அருகே 5 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி வாலிபரை சமரசம் செய்து இறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)