திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுக்காவிற்கு உட்பட்ட கருங்காலி குப்பம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் அந்தோணியார் நகர் உள்ளது. இங்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக புதியதாக  கேபிள் மாதா சிலை அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்தப் பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் தினந்தோறும் அங்கு சென்று கேபிள் மாதாவை வழிபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மாதா சிலையை உடைத்ததாக கூறப்படுகிறது. மேலும் மாதா கோயிலின் அருகில் சாலையோரம் உள்ள ஒரு வீட்டில் வசிக்கும் முருகன் என்பவர் தன் வீட்டின் முன்பாக காரை நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் இரவு நேரத்தில் காரின் முன்புற கண்ணாடி பக்கவாட்டில் இருபுறமும் உள்ள கண்ணாடிகள் மற்றும் இண்டிகேட்டர்கள் ஆகியவையும் அடித்து நொறுக்கப்பட்டு இருந்துள்ளது.



அதனை தொடர்ந்து அந்தோணியார் நகர் தெருவில் வசிக்கும் சிலர் அதிகாலை வழக்கம்போல அங்கு வந்து பார்த்த போது மாதா சிலை உடைக்கப்பட்டு பல பாகங்களாக கீழே விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கு இருந்தவர்கள் கீழ்பெண்ணாத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்பெண்ணாத்தூர் காவல்துறையினர் அந்தோணி புரத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை காவல்துறையினர் சேகரித்து ஆய்வு செய்ததில், மாதா சிலையை  நபர் ஒருவர் சேதப்படுத்துவது தெரியவந்தது.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- 10,12ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாள் லீக் - CSR பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீஸ்



இதனை அடுத்து காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த நபர் கீழ்பெண்ணாத்தூர் அருகே உள்ள நாரியமங்கலம் கிராமத்தை சேர்ந்த  நெடுஞ்செழியன் என்பவரின் மகன் விஜி என்பது தெரிய வந்தது. பின்னர் விஜியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில்  விஜி சிறிது மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும் குடிபோதையில் மாதா சிலையில் மற்றும் கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதும் தெரியவந்தது. இதற்கு முன்னதாக திருவண்ணாமலை துணை கண்காணிப்பாளர் கிரன் சுருதி கீழ்பெண்ணாத்தூர் ஆய்வாளர் கோவிந்தசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Local body election | என்னை போல் ஏர் ஓட்டி சம்பாதித்த பணமா உன்னிடம் உள்ளது ? - அதிமுக வேட்பாளருக்கு எ.வ.வேலு கேள்வி