இருவரும் நண்பர்கள்

 

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் அவருக்கு வயது 19. அதே முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷன் (19). இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் நண்பர்களாக பழகி உள்ளனர். அதேபோல ஒரே பள்ளியில் படித்து முடித்துள்ளனர். இதனை அடுத்து கல்லூரிக்கு ஒரே கல்லூரியில் சேர வேண்டும் என முடிவுசெய்து. பின்பு சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர்.



 

 

இன்ஸ்டாகிராம் 

 

கல்லூரியில் சேர்ந்த முதல் இருவரும் பெரிய அளவில் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் தனித்தனியே இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். விளையாட்டாக ரீல்ஸ் போட்டுக் கொண்டிருந்த சமயத்தில், சார்லஸ் வெளியிடும் வீடியோவிற்கு அதிக லைக்குகள் வந்துள்ளது. கல்லூரி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. ஆனால் நண்பர் சார்லஸ்க்கு கிடைக்கும் வரவேற்பு அளவிற்கு, பிரியதர்ஷனுக்கு கிடைக்கவில்லை இதனால் நண்பர்கள் இருவருக்கும் இடையே வீடியோ வெளியிடுவதில் போட்டி ஏற்பட்டுள்ளது.

 

வீடியோ வெளியிடக்கூடாது

 

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பிரியதர்ஷன், சார்லஸை இனி நீ வீடியோ வெளியிடக்கூடாது என்று மிரட்டியுள்ளார். ஆனால் இதைகண்டுக்கொள்ளாத சார்லஸ் தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரியதர்ஷனை கிண்டல் செய்வது போன்று கே.ஜி.எப் படத்தில் வரும் வசனத்தை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். குறிப்பாக பிரியதர்ஷன் சார்லஸை மிரட்டி அதிலிருந்து, சார்லஸ் பிரியதர்ஷனை வெறுப்பேற்றும் விதமாக வீடியோ போட்டு வந்ததாக கூறப்படுகிறது.



 

இதை பார்த்து மேலும் ஆத்திரமடைந்த பிரியதர்ஷன்,சார்லஸை எப்படியாவது வீடியோ போடுவது நிறுத்தி, அவரை பழிவாங்க வேண்டும் என நினைத்துள்ளார். அதற்காக கடந்த 23-ஆம் தேதி கத்தி உள்ளிட பயங்கர ஆயுதங்களுடன் பிரியதர்ஷன், சில நண்பர்களுடன் கல்லூரி வாசலில் காத்திருந்துள்ளார். மதியம் கல்லூரி முடிந்து சார்லஸ் வெளியே வந்ததும் இந்த கும்பல் அவரை தாக்க முயன்றுள்ளது . ஆனால் சார்லஸ் மீண்டும் கல்லூரி உள்ளே ஒடி தப்பிக்கொண்டார்.

 

கண்மூடித்தனமான தாக்குதல்

 

இருந்தாலும் கொலை வெறிகும்பல் சார்லஸுன் நண்பர் ஒருவரை கத்தியால் தலை, கை,கால்களில் கண்மூடித்தனமாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளது. இதில் படுகாயமடைந்த மாணவரை மீட்ட சக மாணவர்கள், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பல்லாவரம் காவல்துறையினர் கல்லூரி மாணவரை தாக்கிய தாம்பரம் பகுதியை பிரணவ், புது பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த தமிழரசு, சந்தோஷ் , நந்தகுமார் மற்றும் ஒரு சிறுவர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர்.