கஞ்சா விற்ற மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் நகர காவல் நிலைய சரகத்தில் வெங்கமேடு என்.எஸ்.கே நகரில் வசிப்பவர் முத்து மகன், கந்தன் என்கிற கந்தசாமி (வயது 41). கரூர் மொச்ச கொட்டாம்பாளையத்தை சேர்ந்த முருகன் மகன் கார்த்திக்கண்ணன் என்கின்ற பார்த்திபன் (வயது 31) மற்றும் அவரது தம்பி ரூபன் என்கிற ரூபன் ராஜ் (வயது 27) ஆகிய மூன்று பேரும் கரூர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததால், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி கரூர் நகர காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேற்கண்ட மூணு பேரும் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்ததால், எஸ்.பி பரிந்துரையின் பேரில் கந்தசாமி, கண்ணன், ரூபன் ஆகிய மூன்று பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி மூன்று பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, குட்கா, லாட்டரி விற்பனை, மணலை கடத்தி விற்பனை செய்தும் மற்றும் அரசு அனுமதி இல்லாமல் மதுபானங்களை விற்பனை செய்தும் வருகின்றனர். இந்த மூன்று நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.பி சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.
இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை.
இன்ஜினியரிங் படிக்க பெற்றோர் வற்புறுத்தியதால் கரூரை சேர்ந்த இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம் இளங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்நாதன் இவரது மகள் கவுசல்யா (வயது 21.) கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பங்களா மேடு மசினியம்மன் கோவில் வீதியில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் தங்கி இருந்து, டி.வி.எஸ் நகரில் செயல்படும் ஒரு அழகு நிலையத்தில் பயிற்சி பெற்று வந்தார். இதற்கிடையில் கவுசல்யாவை அவரது பெற்றோர் இன்ஜினியரிங் படிக்க வைக்க விரும்பியதாக தெரிகிறது. ஆனால், அவருக்கு அதில் ஆர்வம் இல்லை. மாறாக அழகு கலை பயிற்சி பெறுவதில் ஆர்வம் காட்டினார். இதன் காரணமாக அவருக்கும் பெற்றோருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இன்ஜினியரிங் படிக்க பெற்றோர் வற்புறுத்தியதாக தெரிகிறது.
இறுதியாக தற்கொலை முடிவு.
இதனால் ஆத்திரம் அடைந்த கௌசல்யா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று உயிரிழந்த கௌசல்யாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதலால்,அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.