மும்பை தானே நகரில் உள்ள கல்வாவின் இந்திரா நகர் பகுதியில் உள்ள வீட்டில், 28 வயதான அனில் லக்ஷ்மண் லோகண்டே மற்றும் 25 வயதான அவரது மனைவி மீனா ஆகியோர் வசித்து வந்துள்ளனர். அடிக்கடி இந்த தம்பதியினருக்கு இடையில் சண்டையும் வாக்கு வாதமும் நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அதாவது இம்மாதத்தின் 23ம் தேதி அதிகாலையில் இவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக நடக்கும் வாக்குவாதம் தானே என அக்கம் பக்கத்தினரும் அமைதியாக இருந்துவிட்டனர். முதலில் வாக்குவாதமாக இருந்த நிலையில், வாக்குவாதம் முற்றி தகராறாக முற்றியுள்ளது. இதனால், அடிதடியாக மாறிய நிலையில், கணவன் அனில் லக்ஷ்மண் லோகண்டே அவரது மனைவி மீனாவினை கடுமையாக தாக்கியுள்ளார். இறுதியில் மீனாவின் கழுத்தை அனில் லக்ஷ்மண் லோகண்டே நெரித்துள்ளார். வலி தாங்கமுடியாமல் மீனா அலறியுள்ளார். மீனாவின் அலறல் சத்தத்தினை கேட்டு அக்கம் பக்கத்தினர் மீனா மற்றும் அனில் லக்ஷ்மண் லோகண்டே தங்கியுள்ள வீட்டிற்கு விரைந்துள்ளனர்.
ஆனால் அக்கம் பக்கத்தினர் செல்வதற்குள் அனில் லக்ஷ்மண் லோகண்டே மீனாவின் கழுத்தினை மிகவும் கொடூரமான முறையில் நெரித்துள்ளார். மேலும், அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்துள்ளனர். மும்பை தானே நகரில் வெள்ளிக்கிழமை நடந்துள்ள இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து எச்சரிக்கப்பட்டதையடுத்து, காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அனில் லக்ஷ்மண் லோகண்டே மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் மனோகர் அவாத் நேற்று தெரிவித்துள்ளார்.
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறால், கணவனால் மனைவி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்வத்தால் தானே நகர் பகுதி மக்களிடத்தில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.