விழுப்புரத்தில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 16 பவுன் நகை கொள்ளை விழுப்புரம் தாலுகா காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள NGO காலனி பகுதியில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்டது. ஹைதராபாத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் அருண்ராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது உறவினர் துக்க நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்காக நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று இருந்த இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டில் இருந்த 15 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று காலை உறவினரின் துக்க நிகழ்ச்சியில் இருந்து இன்று காலை வீடு திரும்பிய பொழுது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு நகை திருடு போனதை அறிந்தவர் விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


இதனை தொடர்ந்து தாலுக்கா காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று இந்த வீட்டின் அருகில் உள்ள வசந்தகுமாரி என்பவர் வீட்டின்  மதில் சுவரின் மேல் ஏறி  குதித்து வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டின் பீரோவில் இருந்த ஒரு பவுன் நகையே திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்தும் விழுப்புரம் தாலுக்கா காவல்துறையினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் என் ஜி ஜி ஓ காலனி பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு கொள்ளை சம்பவங்களால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.