இந்தியாவில் உள்ள தொழில்நுட்பங்கள் மற்றும் கொரோனாவிற்கு பிறகு எப்படி இருக்கிறது குறித்து இண்டஸ் வேலி அறிக்கை 2022 என்ற பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையை ப்ளூம் வென்சர்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவிலுள்ள பணப்பரிவர்த்தனை, வேலை வாய்ப்பு, இணையதள பயன்பாடு ஆகியவை குறித்து பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி இந்தியாவில் கடந்த ஒராண்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் யுபிஐ பரிவர்த்தனைகள் 43% ஆக இருந்துள்ளது. இது கடந்த் ஆண்டு நடைபெற்ற கிரேடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளைவிட மிகவும் அதிகமானது எனத் தெரியவந்துள்ளது. மேலும் 50% இந்தியர்கள் இன்னும் தங்களுடைய பணபரிவர்த்தனைகளுக்கு பணம் அளிக்கும் முறையை தொடர்ந்து பின்பற்றி வருவதும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் இந்தியாவில் இணையதள சேவை பயன்பாட்டு சராசரியாக ஒரு மாதத்திற்கு 18.4 ஜிபியாக உள்ளது.இது சீனாவின் ஒரு மாத சராசரி இணைய பயன்பாட்டைவிட அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் ஃப்ரீலென்சிங் மூலம் பலருக்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த ஒராண்டில் 70 சதவிகித இ-வர்த்தகம் தொடர்ந்து அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் தளங்களில் நடைபெற்றுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
2021ஆம் ஆண்டு இந்தியா 35 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை திரட்டியுள்ளது. இது இங்கிலாந்து நாடு திரட்டிய நிதியின் அளவாக அமைந்துள்ளது. அத்துடன் சீனா திரட்டிய நிதியில் 3ல் ஒரு பங்காக அமைந்துள்ளது. நாசரா, சோமேட்டோ, கார்ட்ரேட், பாலிசிபஜார்,பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் குறைந்துள்ளது. நிதி சேவை தொடர்பான நிறுவனங்கள் கடன் கொடுக்கும் சேவைகளில் 6% வரை கடன் வழங்கியுள்ளதும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்