GOLD RATE TODAY: நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! ஒரே நாளில் 2.160 ரூபாய் உயர்ந்த தங்கம்.! வெள்ளியின் விலை என்ன தெரியுமா.?
Gold and silver rate today: தங்கத்தின் விலையானது கடந்த 3 நாட்களில் 2640 ரூபாய் குறைந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலையானது 2160 ரூபாய் அதிகரித்துள்ளது.

தங்கத்தின் மீதான ஆர்வம்
இந்தியாவில் தங்கத்தின் மீதான ஆர்வத்தின் காரணமாக அதிகளவு தங்க நகைகளை மக்கள் வாங்கி வருகிறார்கள். அதிலும் திருமண நிகழ்வுகள், விஷேசங்கள் போன்றவற்றில் தங்க நகை முக்கிய இடம் வகித்து வருகிறது. எனவே தங்கத்தின் விலை உயர்ந்தாலும் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. அதே நேரம் நடுத்தர வர்க்க மக்களால் தங்க நகைகளை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாத சம்பளத்தில் சிறுக, சிறுக பணம் சேமித்து சீட்டு போட்டு வாங்க முடியாத நினைத்தவர்களுக்கு பேரிடியாக தங்கம் விலை ஏற்றம் உள்ளது.
தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக போர் பதற்றம் ஒரு காரணமாக இருந்தாலும் பல முன்னனி நாடுகள் டாலரில் வர்த்தகம் செய்வதற்கு பதிலாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்க திட்டமிட்டனர். இதனால் அதிகளவு தங்கத்தை வாங்கி குவித்து வருவதால் தங்கத்தின் மதிப்பு அதிகரித்து விலையானது உயர்ந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலையானது தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
தங்கம் விலை நிலவரம்
- 14-ம் தேதி தங்கம் கிராமிற்கு 160 ரூபாய் உயர்ந்து 14,560 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,280 ரூபாய் விலை உயர்ந்து 1,16,480 ரூபாய்க்கும் விற்பனை.
- 15-ம் தேதி தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை
- 16-ம் தேதி, தங்கம் கிராமிற்கு 120 ரூபாய் குறைந்து 14,440 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து 1,15,520 ரூபாய்க்கும் விற்பனை.
- 17ஆம் தேதி தங்கம் கிராம் ஒன்றுக்கு 120 ரூபாய் குறைந்து 14ஆயிரத்து 320 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 14ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை.
- 18ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 90 ரூபாய் குறைந்து 14ஆயிரத்து 230 ரூபாய்க்கும், சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து 1,13,840 ரூபாய்க்கு விற்பனை
இன்றைய தங்கம் விலை என்ன.?
தங்கத்தின் விலையானது கடந்த 3 நாட்களாக குறைந்து வருகிறது. அந்த வகையில் சவரனுக்கு 2640 ரூபாய் குறைந்த நிலையில் இன்று அதிரடியாக தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 270 ரூபாய் உயர்ந்து 14500 ரூபாய்க்கும், சவரனுக்கு 2160 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 16ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதேபோல வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் அதிகரித்து 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 70ஆயிரம் ரூபாய்குக விற்பனையாகிறது.























