சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 10 நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.92.58க்கும், டீசல் லிட்டருக்க ரூ.85.88க்கும் விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தொடர்ந்து 11வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் விற்கப்படுகிறது.


பெட்ரோல் டெல்லியில் ரூ.90.56க்கும், கொல்கத்தாவில் ரூ.90.77க்கும், மும்பையில் 96.88க்கும் விற்கப்படுகிறது. டீசல் டெல்லியில் லிட்டருக்கு ரூ.80.87க்கும், கொல்கத்தாவில் ரூ.83.75க்கும், மும்பையில் ரூ.87.96க்கும் விற்கப்படுகிறது.